கோக்-பெப்சிக்கு தடை: சிபிஐ கோரிக்கை
சென்னை:
தமிழ்நாட்டில் பெப்சி, கோக் பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,காவிரி நீர் பிரச்சனையை விசாரித்து தீர்ப்பு வழங்க நியமிக்கப்பட்ட ஆணையம் தீர்ப்பு வழங்காமல் காலம்தாழ்த்துவது முறையற்றது. உடனாடியாக தீர்ப்ப்பை வழங்க வேண்டும். அதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டஇடைக்காலத் தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும்.
லெபனான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுடன் செய்து கொண்டஆயுத ஒப்பந்தங்கள் அனைத்தும் உடனே ரத்து செய்ய வேண்டும். இலங்கையில் ராணுவம் தமிழர்கள் மீதுதாக்குதல் நடத்துவது அநாகரீகமானது. இந்திய அரசு உடனே தலையிட்டு இதை தடுக்க வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத்துறை சென்னையை சுற்றியே வளர்கிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட மற்றநகரங்களுக்கும் அதைப் பரவலாக்க அரசு முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தொழிலாளர் நலத்துறை இயங்கவே இல்லை, இதனால் அதன் பணிகள் தேங்கி கிடக்கின்றன.தொழில் வளர்ச்சி பெருகி வருவதாக கூறும் அரசின் தொழிலாளர் நல இலாகா இயங்காமல் இருப்பதுவேதனைக்குரியது.
நச்சு கலந்த கோக், பெப்சி பானங்களை தமிழ்நாட்டில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். பணத்துக்காகவிளையாட்டு வீரர்கள் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்காக, விஷத்தை விற்பதை ஏற்க முடியாது.இதை எதிர்த்து முறியடிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்ற கட்சிகளுடன் பேசி விட்டுகூட்டு இயக்கத்தை உருவாக்குவோம். மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications