நடிகை-நடிகர் உல்லாசம்: மிரட்டி பணம் பறித்த பெச்சு ரகுமான்
திருவனந்தபுரம்:
![]() |
தந்தரி விவகாரத்தில் தலைமறைவாகிவிட்ட மலையாள நடிகர் பெச்சு ரகுமான், ஒரு பிரபல மலையாள நடிகரும்,ஒரு நடிகையும் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டி பெரும் பணம் சம்பாதித்ததுவிசாரணையில் தெரிய வந்துள்ளது.
தந்திர கண்டரரு மோகனருவை பெண்ணுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் ஷோபா ஜான்உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஷோபாவுக்கு உதவியாக இருந்த மலையாள நடிகர் பெச்சுரகுமானை போலீஸ் தேடி வருகிறது. அவர் தலைமறைவாகிவிட்டார்.
தந்திரிக்கு முன்பே பெச்சு ரகுமான் இதே பாணியில் பலரையும் சிக்க வைத்து கோடிக்கணக்கில் பணம் பறித்தவிஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.
சினிமா ஆசையில் ஊரை விட்டு ஒடி வரும் இளம் பெண்களை தயாரிப்பாளர் போர்வையில் மயக்கி ஆபாச படம்எடுத்து விற்ற ரஹ்மான், பல விஐபிக்களுக்கு பெண்களை சப்ளை செய்தும் வந்தார்.
![]() |
இந் நிலையில் வளைகுடாவுக்கு நடிகர், நடிகைகளை அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்ததொடங்கினார். ஒருமுறை ஏராளமான நடிகர், நடிகைகளை வளைகுடாவுக்கு அழைத்துச் சென்றபோதுஅக்குழுவில் இருந்த ஒரு பிரபல மலையான நடிகர், ஒரு இளம் நடிகையின் மீது கண் வைத்துள்ளார்.
நடிகையிடம் தனது ஆசையை சொல்ல தயங்கிய அவர், பெச்சு ரகுமானிடம் தனது விருப்பத்தை வெளியிடவே,ரகுமான் அந்த நடிகையிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகரும்,நடிகையும் உல்லாசமாக இருந்தனர். அப்போது பெச்சு ரகுமான் கும்பல் அவர்களுக்கு தெரியாமல் அதை படம்எடுத்துள்ளது.
வளைகுடா பயணம் முடிந்து ஊர் திரும்பிய பின் அந்த நடிகரையும் நடிகையையும் ஒரு கும்பல் வீடியோவைக்காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளது.
![]() |
இதன் பின்னணி விவரம் எதுவும் தெரியாமல், ரஹ்மானிடமே சென்று ஆலோசனை கேட்டுள்ளார் அந்த நடிகர்.அப்போது பெச்சு ரகுமான் நடிகருக்கும் ஆபாச படம் எடுத்த கும்பலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவைப்பது போல நடித்துள்ளார்.
கடைசியில், வேறு வழியே இல்லை. ஆபாச படத்தை வெளியிட்டால் உங்கள் மானம் போய்விடும். அதனால்அந்தக் கும்பல் கேட்டபடி பணத்தை கொடுத்துவிடுங்கள் என்று ரகுமான் கூறவே அந்த நடிகர் தன்னை மிரட்டியகும்பலிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்துள்ளார். இந்தப் பணம் பின்னர் பெச்சு ரகுமான் கைக்கு வந்துசேர்ந்துள்ளது.
கலைநிகழ்ச்சி என்ற பெயரில் வளைகுடாவுக்கு இளம் பெண்கள், துணை நடிகைகளையும் அழைத்து சென்றுஅங்கு உள்ள பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்களுக்கு அந்தப் பெண்களை சப்ளை செய்து பணம்சம்பாதித்துள்ளார் ரஹ்மான்.
இந் நிலையில் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவரது சொத்துக்களை முடக்க போலீசார்திட்டமிட்டுள்ளனர். ரகுமான் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுக்க விமான நிலையங்களிலும்போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஷோபாவுக்கு ஜாமீன்:
இந் நிலையில் ஷோபா ஜானுக்கு நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் விதித்தது. அவர் கடந்த 3ம் தேதி கைதுசெய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.















Click it and Unblock the Notifications