ஆனந்தராஜ் வீடு: காண்டிராக்டர்கள் முற்றுகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி பிஷப் ஆனந்தராஜிடம் லட்சக்கணக்கான பணத்தைக் கொடுத்து ஏமாந்தகாண்டிராக்டர்கள், மாமல்லபுரம் அருகே உள்ள அவரது ஆடம்பர வீட்டைமுற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர்.

ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்ட காண்டிராக்டை தருவதாக கூறிநூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் லட்சம் லட்சமாக பணத்தை வாங்கிக்கொண்டு மோசடிசெய்துவிட்டார் ஆனந்தராஜ் என்று புகார் கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவரை போலீஸார் கைதுசெய்தனர்.

அவரது மனைவி, மகள்கள், வளர்ப்பு மகன் சுரேஷ், உதவியாளர் பழனி உள்ளிட்டஅத்தனை பேரும் தலைமறைவாகி விட்டனர்.

கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரையிலும் ஆனந்தராஜ் மோசடி செய்திருக்கலாம் எனகருதப்படுகிறது. தினசரி அவர் மீது ஏராளமான காண்டிராகடர்கள் புகார் கொடுத்தவண்ணம் உள்ளனர். நேற்று லட்சுமணன் (27 லட்சம் ஏமாந்தவர்), முத்துச்சாமி ( 9லட்சம்), சங்கர், சாலமன் (தலா 17 லடசம்), முருகன் (13 லட்சம்), விக்கிரசிங்(20லட்சம்) ஆகிய காண்டிராக்டர்கள் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் ஆனந்தராஜ்மீது புகார் கொடுத்தனர்.

பின்னர் பேரூர்அருகே உள்ளஆனந்தராஜின் சொகுசு பங்களாவுகக் வந்தனர். அந்தவீட்டைக் கைப்பறறிய அவர்கள் இழந்த பணம் திரும்பக் கிடைக்கும் வரைஇங்கிருந்து நகரமாட்டோம் என தெரிவித்துள்ளனர். அலுவலகத்திற்குள் இருந்தகோப்புகளை தூக்கி எரிந்தனர். ஆனந்தராஜ் படங்களையும் அடித்து நொறுக்கினர்.

ஆனந்தராஜ் குறித்த மேலும் பல விவகாரமான தகவல்களும் வெளியாகியுள்ளன.இவருக்கு பெண் சபலம் அதிகமாம். இதனால் பல காண்டிராக்டர்கள், தங்களுக்கேகாண்டிராக்ட் கிடைக்க வேண்டம் என்பதற்காக விபச்சாரப் பெண்களையும், கொஞ்சம்வசதி படைத்தவர்கள் துணை நடிகைகளையும் ஆனந்தராஜுக்கு ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனராம்.

கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஆனந்தராஜுக்குச் சொந்தமான 3 ஆடம்பரசொகுசு பங்களாக்களில் தமிழ் சினிமா நடிகைகள், டிவி நடிகைள் ஆகியோரோடுஆனந்தராஜ் அடிக்கடி உல்லாசமாக இருப்பாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+