யாழ்பாணத்தில் கடும் சண்டை: விமான தாக்குதலில் 61 சிறுமிகள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வன்னி பகுதியில் இலங்கை விமானப் படை நடத்திய குண்டுவீச்சில் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 61சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக புலிகளின் செய்தித் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

பரந்தன்-முல்லைத் தீவு சாலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள செஞ்சோலை ஆதரவற்றகுழந்தைகளுக்கான இல்லத்தின் மீது இன்று காலை இலங்கை விமானப் படையின் 4 விமானங்கள் குண்டு வீசிதாக்குதல் நடத்தின. இதில் 61 மாணவிகள் பலியாயினர், மேலும் 60 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

போரில் பலியான பெற்றோரின் குழந்தைகளுக்காக இந்த ஆதரவற்றோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக்குழந்தைகளுக்கு முதலுதவி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது காலை 7.20 மணிக்கு விமானங்கள்குண்டுகளை வீசித் தாக்கின.

இதில் 61 சிறுமியர் பலியாகிவிட்டனர். பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றுதெரிகிறது. காயமடைந்த 60 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்துயூனிசெப் மற்றும் நார்வே கண்காணிப்புக் குழுவினருக்கு தகவல் தரப்பட்டுள்ளது என புலிகள் கூறியுள்ளனர்.

ஆனால், இதை அரசு செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். குழந்தைகள் இல்லம் எதையும் விமானப் படைதாக்கவில்லை என்றும், புலிகளின் பயிற்சி மையத்தைத் தான் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து நார்வே குழுவினர் கூறுகையில், புலிகளிடம் இருந்து இது தொடர்பாக புகார் வந்துள்ளது. அதில்,50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதைடுத்து எங்களது குழு அங்குவிரைந்துள்ளது என்றனர்.

விமான தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டது தொடர்பாக புலிகளிடம் இருந்து புகார் வந்துள்ளதாகயூனிசெப் அமைப்பும் கூறியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து எங்கள் அதிகாரிகள் குழு அங்கு விரைந்துள்ளதுஎன்று கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் முற்றுகையிட்டுள்ள நிலையில்,பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக இலங்கை அரசுஅறிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்க புலிகள் நிராகரித்து விட்டனர்.

யாழ் தீபகற்பத்தை முழுமையாக கைப்பற்ற ராணுவமும் புலிகளும் தீவிர மோதலில்ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை புலிகள்முற்றுகையிட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பலாலி விமானஓடுதளத்தை விடுதலைப் புலிகள் விமானம் மூலம் குண்டு வீசித் தகர்த்து விட்டதால்விமான தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையே ராணுவ விமானப்போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும், புலிகள் சுற்றி வளைத்துள்ளதால் யாழ்ப்பாணம், நாட்டின் பிறபகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியவினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்குள் 40,000 ராணுவ வீரர்கள் நிலை கொண்டுள்ளனர்.அவர்களுக்கான சப்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இலங்கை அரசின் அமைதிச் செயலக தலைவர் டாக்டர் பலிதாகோஹோனா கூறுகையில், இலங்கை போர் நிறுத்தக் குழுவின் மூலமாகபேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விடுதலைப் புலிகள் முயன்றனர்.

பேச்சுவார்த்தையை தொடர இலங்கை அரசும் விருப்பம் கொண்டுள்ளது. விரைவில்அதுதொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் விடுதலைப் புலிகள்தரப்பிலிருந்து மறுபடியும் தொடர்பு ஏதும் இல்லை என்றார்.

ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். புலிகளின் அமைதிச் செயலகத்தலைவர் புலித்தேவன் கூறுகையில், கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில்பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இல்லை என்றார்.

இதற்கிடையே யாழ்ப்பாணத்திற்குள்ளும் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரசண்டை நடந்து வருகிறது. இந் நிலையில் யாழ்பாணத்தில் ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது.

மோதலில் இருந்து தப்பி நூற்றுக்கணக்கான தமிழர்கள் கிறிஸ்தவ ஆலயங்களில்தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் தேவாலயங்கள் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.அல்லை பிட்டி என்ற இடத்தில் உள்ள புனித பிஷப் மரியான் தேவாலயத்தின் மீதுநடந்த தாக்குதலில் அந்த ஆலயம் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி 15 தமிழர்கள் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

61 தமிழ்ச் சிறுமிகள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் கொழும்பில் பாகிஸ்தான்தூதரக அதிகாரியின் கார் அணிவகுப்பு மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+