அனுதாபம் பெற ஜெ முயற்சி- ராமதாஸ் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சட்டப் பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களை தூண்டிவிடும் வேலையில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,

சட்டப் பேரவை தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஜெயலலிதா, தேல்வியை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்.தோழமைக் கட்சிகளின் முழு ஆதரவோடு திமுக அரசு பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் பல வாக்குறுதிகளைநிறைவேற்றி மக்களின் மதிப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது.

இதை ஜெயலலிதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படாமல் அரசுமீது பழி சுமத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இதன் மூலம், மக்களின் அனுதாபத்தைபெற முயற்சிக்கிறார்.

தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களை தூண்டிவிடும் சதி வேலையில் ஜெயலலிதா ஈடுபட்டு இருப்பதாகதெரிகிறது. திமுகவில் உள்ள அமைச்சர்கள் உணர்ச்சிகளை அடக்கி, ஜெயலலிதாவின் சதி திட்டத்துக்குஇரையாகாமல் இருக்க வேண்டும். அதிமுகவின் சதி திட்டத்துக்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

இலங்கையில் போர் மூண்டுள்ளது. இது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். போரின் முழு பொறுப்பை இலங்கைஅரசுதான் ஏற்க வேண்டும். சமாதான முயற்சிகளை அது ஏற்கவில்லை. இந்தியாவின் ராணுவ உதவிகளையும்,ஆயுதங்களையும் பெற துடிக்கிறது. இந்த பிரச்சனையில் இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். அப்பாவிமக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இந்து நாளிதழும், சிஎன்என்னும் நடத்திய கருத்து கணிப்பின்படி மூன்று மாதங்களுக்குள், முதல்வர் செயல்பாடுபட்டியலில் கருணாநிதி 4வது இடத்தை பிடித்துள்ளார். இன்னும் 6 மாதத்தில் அவர் முதலிடத்தை பிடிப்பார்.

2001-2006ம் ஆண்டுகளில் ஆட்சி செய்த ஜெயலலிதா, இந்த பட்சியலில் 19வது இடத்தில் இருந்தார் என்பதுமக்கள் அறிந்தது தான் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+