கல்பாக்கத்தில் தொடரும் தீவிர கண்காணிப்பு
கல்பாக்கம்:
கல்பாக்கத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணு மின்நிலையத்தை சுற்றி அனுமதியின்றி யாரும் நடமாட விதிக்கப்பட்ட தடை 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தைதீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தந்த தகவலை தொடர்ந்துபலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் அணுமின் நிலையம் கொண்டு வரப்பட்டது.ராணுவம், பாரா மிலிட்டரிப் படைகள், தமிழக போலீசார், கமாண்டோக்கள் என சுமார்2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணு மின் நிலையத்தைசுற்றி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் வான்வெளியில் ஹெலிகாப்டர்கள், கடற் பகுதியில் கடலோரப் பாதுகாப்புப்படை கப்பல்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 200 மீட்டர் சுற்றளவுக்குஅனுமதியின்றி யாரும் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 20ம் தேதிவரை இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கத்துக்கு வரும் எல்லா வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. 200மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வெளி வாகனும் அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து மாமல்லபுரம் எஸ்பி செளந்திரராஜன் கூறுகையில், தீவிரமான பாதுகாப்புஏற்பாடுகளால் தீவிரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications