ஷாருக்கான் வீட்டு காவலாளி சுட்டுக் கொலை
மும்பை:
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வீட்டுக் காவலாளியை, சக காவலாளியே சுட்டுக்கொன்றார்.
ஷாருக் கானின் வீடு மும்பை புறநகரில் உள்ள பந்த்ரா மேற்கு, பந்த் ஸ்டாண்ட்பகுதியில் உள்ளது. மன்னட் என பெயரிடப்பட்ட இந்த வீட்டில், டாப்ஸ் செக்யூரிட்டிஎன்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளிகள் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் தவிர பந்த்ரா காவல் நிலைய போலீஸ்காரர் ஒருவர் வீடடின் முன் பகுதியில்காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 12.20 மணியளவில்யதீந்திர சிங் செளகான், சந்தீப்தர் மாஜி விஜய் சிங் ஆகிய டாப்ஸ் நிறுவன காவலர்கள்வீட்டின் பின் பகுதியில் காவல் பணியில் இருந்தனர்.
அப்போது ஷாருக்கானும், குடும்பத்தினரும் வீட்டில் இல்லை. பாதுகாப்புப் பணியில்இருந்த செளகானைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்துள்ளார். உட்கார்ந்து கொண்டேவேலை பார்க்கும் மாதம் 15,000 ரூபாய் சம்பளமா, துப்பாக்கியை சரியாகப் பிடித்துஉனக்கு சுடத் தெரியுமாமுதலில் என்று சீண்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த செளகான், தனது கையில் இருந்த . 32 ரக துப்பாக்கியை,விஜய் சிங்கின் நெஞ்சில் வைத்து சுட்டுள்ளார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்துசம்பவ இடத்திலேயே விஜய் சிங் இறந்து போனார்.
துப்பாக்கி சப்தம் கேட்டதும் இன்னொரு காவலரான சந்தீப் லக்கானும்,போலீஸ்காரரும் விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் விஜய் சிங் கிடந்தார்.நடந்ததை உணர்ந்த அவர்கள் செளகானைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர் தப்பி விட்டார். பின்னர் செளகானை கர் கோவன் பகுதியில் உள்ளஅவரது வீட்டுக்கு அருகே வைத்து போலீஸார் கைது செய்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட விஜய்சிங்குக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.பந்த்ராவில் உள்ள மெளன்ட் மேரி சர்ச்சுக்கு அருகே தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். இவரது சொந்த ஊர் அலகாபாத். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ஷாருக்வீட்டு பாதுகாப்புப் பணியில் சேர்ந்தார்.
விஜய் சிங்கை சுட்டுக் கொன்ற செளகான், உ.பி. மாநிலம் மயின்பூரி மாவட்டத்தைத்சேர்ந்தவர். கடந்த ஜூலை 27ம் தேதிதான் அவர் மும்பைக்கு வந்தார். டாப்ஸ்நிறுவனத்தில் சேர்ந்தவுடனேயே அவர் ஷாருக்கான் வீட்டு பாதுகாப்புக்குஅனுப்பப்பட்டுள்ளார்.
செளகானின் சொந்த ஊர் கிரிமினல்கள் நிறைந்த மாவட்டம். இந்த ஊரைச் சேர்ந்தபலர்மீது பல மாநிலங்களில் திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட வழக்குகள்உள்ளன என்று மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் காவல் ஆணையர் பிபின் பிஹாரிகூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷாருக் கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications