வள்ளலார் ஜோதியோடு இமயமலை பயணம்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ஞானாலயா வள்ளலார் கோட்டம் என்ற அமைப்பைச் சேர்ந்த50 பேர் கொண்ட குழு வள்ளலார் ஜோதியை ஏற்றுவதற்காக உத்தராஞ்சல் மாநிலம்கார்வால் மாவட்டத்தில் இமயமலையில் அடிவாரத்தில் உள்ள சமோலி மலைகிராமத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்லும், அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரானசுவாமி திருஞானானந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,ஆண்டுதோறும் இப்பயணம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம தேதி சமோலி மலையில்இந்த ஜோதி ஏற்றப்படும்.
இந்த மலை கடல்மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலைபுராண காலத்தில் தாரகாவனம் என்று அழைக்கப்பட்டது. இந்த மலைக்குஜோதியர்வதம் என்ற பெயரும் உண்டு. இங்கு வேதங்களில் கற்றுத் தேர்ந்த பலரிஷிகள் வாழ்ந்துள்ளனர்.
வேதங்களில் நிபுணத்துவும பெற்றதால் இவர்களிடையே யார் பெரியவர் என்றுசர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவர்களுடையே ஈகோவை உடைத்து புத்தி புகட்டுவதற்காகபிச்சைக்காரர் வடிவில் சிவபெருமான் வந்து பாடம் புகட்டியதாக புராணங்களில்கூறப்படுகிறது.
ஜோதி லிங்க வடிவில் பின்னர் ரிஷிகளுக்கு சிவபெருமான் காட்சி அளித்தாராம்.
இமய மலையிலேயே இங்கு மட்டும்தான் 23 வகையான வில்வ மரங்கள் உள்ளன.இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மலை உச்சியில் வள்ளலார் ஜோதியை ஏற்றும்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் யாத்திரையாக இங்குவந்து சேருகின்றனர்.
மனித குல நன்மைக்காக இங்கு சிறப்பு வழிபாடும் நடைபெறவுள்ளது.ஜோதி ஏற்றப்பட்ட பின்னர் பத்ரிநாத், ஜோதிமட், அதிரிமகரிஷி கோவில், கேதார்நாத்,கங்கோத்ரி, யனோத்ரி, ரிஷிகேஷ், காசி ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரைமேற்கொள்ளப்படும்.
செப்டம்பர் 1ம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் (இங்குதான் வள்ளலார்அவதரித்தார்) உள்ள ஞானசபையில் யாத்திரை முடிவு பெறும் என்றார் சுவாமிதிருஞானானந்தா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications