ராகிங் செய்தால் 2 ஆண்டு சிறை-அண்ணா பல்கலை
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் முதலாண்டில் சேரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் "ராகிங்என்ற பெயரில் துன்புறுத்தி வருவது வழக்கமாக உள்ளது. சில நேரம் இது எல்லை மீறிஉயிர்களையும் பறிக்கிறது.குறிப்பாக, விடுதிகளில் தங்கும் ஜூனியர் மாணவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.உடைகளை கழற்றி துன்புறுத்துவது உள்ளிட்ட அத்துமீறல்கள் நடந்து வருகின்றன.
ஆனால்,சில ஆண்டுகளுக்கு முன்பே இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.ராகிங் செய்தால் கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.இருப்பினும் கொடுமை நிற்கவில்லை.
இந் நிலையில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ராகிங் செய்வதற்கு தடை விதித்து,அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த 97ம் ஆண்டு ராகிங் தடைச் சட்டத்தின்படி சத்தம் எழுப்புதல், ஒழுங்கற்றநடத்தை, உடலுக்கோ, மனதுக்கோ தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள், பயம்அல்லது அவமானத்தை ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்துதல்,
சீண்டுதல், மாணவரை துன்புறுத்தும் வகையில் விளையாடுதல் அல்லது ஜோக்அடித்தல், ஒரு மாணவர் விரும்பாத ஒன்றை செய்து காட்டும்படி துன்புறுத்துதல்ஆகியவை ராகிங்காக கருதப்பட்டு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10,000ரூபாய் வரை அபராதம், கல்லூரியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ், வேறு எந்தகல்லூரியிலும் சேர முடியாது ஆகிய தண்டனைகள் வழங்கப்படும்.
எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதைதவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில்ராகிங்கை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் யாராவது ராகிங்கில் ஈடுபட்டால், உடனடியாக கண்காணிப்பு குழுவுக்குபுகார் தெரிவிக்கலாம். அதற்கான தொலைபேசி எண்: 22203285 மற்றும் செல்போன்எண் - 9841011089.
இவ்வாறு அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications