விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசு திடீர்அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணுவம், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்தி விட்டு பேச்சு வார்த்தை நடத்தலாம் எனஇலங்கை அரசு புலிகளுககு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்தி வரும் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. வடபகுதியிலும், தென்பகுதியிலும் பல ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்திற்கு கடும் சேதத்தை புலிகள்ஏற்படுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திற்குள் ராணுவம், திணறி வருகிறது. அங்கு சரியான முறையில் ஆயுத சப்ளை இல்லாததால்,ராணுவம் பெரும் பீதியில் உள்ளது. எந்த நேரம் புலிகள் யாழ்ப்பாணத்திற்குள் ஊடுறுவி, ராணுவத்துடன் நேருக்குநேர் தரைச் சண்டையில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளதால் இலங்கை அரசு கவலை அடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இலங்கை விமானப்படை தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதற்குகடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகளும்,மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசை கடுமையா கண்டித்துள்ளன.

இந்தப் பின்னணியில், போரை நிறுத்தி விட்டு பேசலாம் என இலங்கை அரசு புலிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூலம் இலங்கை அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைத் தீவில் நடந்த தாக்குதல் (இதில் தான் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்) தொடர்பாக தமிழகசட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தவறான தகவல்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதாகும்.

தீர்மானத்தில் கூறியபடி சம்பந்தப்பட்ட கட்டடம் அனாதை இல்லம் அல்ல. மாறாக, நீண்டகாலமாக அங்குவிடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தங்களது படைக்குத் தேவையான வீரர்களை இந்தகட்டடத்திலிருந்து தான் விடுதலைப் புலிகள் தேர்வு செய்து சண்டை நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர்.

இந்த கட்டடத்தில் ஆயுதம் தாங்கிய புலிகள் இருந்தது, ஆயுதப் பயிற்சி நடந்தது உள்ளிட்டவற்றுக்கான வீடியோஆதாரம் எங்களிடம் உள்ளது. விமானத் தாக்குதலில் சில சிறுமிகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்பதைநாங்கள் மறுக்கவில்லை.

ஆனால் இவர்கள் அப்பாவிகளாக இருக்க வாய்ப்பில்லை, விடுதலைப் புலிகளின படையில் சேர்ப்பதற்காகதேர்வு செய்யப்பட்டிருந்தவர்களாக இருக்கக் கூடும் என்பது இலங்கை அரசின் கருத்து.

முல்லைத்தீவு மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளிலும் அப்பாவி மனிதர்களின் உயிர்கள் பறி போனதற்காக இலங்கைஅரசு வருத்தம் தெரிவிக்கிறது. ஆனால் இவற்றுக்கு முக்கிய காரணம் விடுதலைப் புலிகள்தான். அவர்கள்பிரச்சினையை ஆரம்பித்ததால் தான் நாங்களும் பதிலுக்கு தாக்க வேண்டியதாயிற்று.

தேசிய அளவில் மிகப் பரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள்பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அரசியல் ரீதியாக மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்றுநாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இலங்கையில் வசிக்கும் அனைத்து இனத்தவருக்கும் உடன்பாடான வகையில் ஒரு தீர்வைக் காண இலங்கை அரசுதயாராக உள்ளது. எனவே பேச்சுவார்த்தைக்கு புலிகள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளது இலங்கை அரசு.

சென்னையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்:

இதற்கிடையில் இலங்கையின் முல்லைத் தீவு மாவட்டம் செஞ்சோலை கிராமததில் இலங்கை விமானப்படைத்தாக்குதலில் 61 தமிழ்ச் சிறுமிகள் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கைதுணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் மற்றும்இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

செஞ்சோலை கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசித்தாக்கியதில் 61 தமிழ்ச் சிறுமிகள் பரிதாபமாக பலியாயினர்.இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர்பெருமன்றம் மற்றும் இளைஞர் அமைப்பு முடிவு செய்திருந்தது.

அதன்படி இன்று காலை ஊர்வலமாக துணைத் தூதரகம் நோக்கி அவர்கள் சென்றபோது போலீஸார் தடுத்துஅனைவரையும் கைது செய்தனர்.

கனடாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்:

இதற்கிடையே கனடா தலைநகர் ஒட்டவாவில் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட மிகப் பெரியஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

கனடா நாடாளுமன்றம் முன்பு நடந்த இந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில், முல்லைத் தீவில் 61 அப்பாவி தமிழ்ச்சிறுமிகளை ஈவு இரக்கமின்றி கொன்று தீர்த்த இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிடப்பட்டது. அப்பாவித்தமிழர்களை கொல்வதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

கொடூரத்தாக்குதலில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசை, கனடா அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றுபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+