மதமாற்றம்: புஷ், சிஐஏ மீது ஆர்எஸ்எஸ் தாக்கு
மதுரை:
இந்தியாவில் மதமாற்றத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏபெருமளவு நிதியுதவி செய்வதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ் உத்தரவின் பேரிலேயே சிஐஏ இந்தநிதியுதவியை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் கருத்தரங்கம் ஒன்றில் சுதர்சன் பேசுகையில், அமெரிக்க அரசு தனது நாட்டுகலாச்சாரத்தை பிற நாடுகளின் மீது திணிக்க முயன்று வருகிறது. குறிப்பாகஇந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப மிகத் தீவிரமாக அது செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார்களை இந்தியாவுக்கு அனுப்பி மிகப்பெரியஅளவில் மத மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.ஜோஷ்வா 1 என்று இந்தத் திட்டத்திற்கு அமெரிக்கா அரசு பெயர் சூட்டியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக தனது உளவு நிறுவனமான சிஐஏ மூலம் பெருமளவுநிதியுதவியையும் செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது. அதிபர் ஜார்ஜ் புஷ்ஷே இந்தத்திட்டத்திற்கு நேரடியாக உதவி வருகிறார்.
இத்திட்டத்திற்காக முதல் கட்டமாக 20 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகதகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிதி பல்வேறு கிறிஸ்தவ தொண்டுநிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவைஇந்தியாவைச் சேர்ந்தவை.
இந்தத் திட்டத்தின்படி தபால் நிலையம் உள்ள சிறிய கிராமப் பகுதிகளில் சிறியஅளவிலான சர்ச் முதலில் உருவாக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நடந்து போயும்,சைக்கிளில் போயும் மதமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அரசினால் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளைத்தான் இவர்கள் குறி வைக்கிறார்கள்.அங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்கள். சமூகசேவை என்ற பெயரில் இங்கு ஏழைகளையும், வறுமையில் வாடுபவர்களையும்ஈர்த்து அவர்களிடம் மதப் பிரசாரம் செய்யப்படுகிறது.
நமது கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக அழித்து விட்டு அமெரிக்க கலாச்சாரத்தைபுகுத்துகிறார்கள். இந்தியாவுக்குள் ஊடுறுவி வரும் வங்கதேசத்தவரால் நாட்டுக்குமிகப்பெரும் ஆபத்து ஏற்படப் போகிறது. ஏற்கனவே அசாம், மேற்கு வங்கம், பீகார்மாநிலங்களில் வங்கதேசத்தவர் பெருமளவில் ஊடுறுவி அந்த மாநிலங்களுக்குபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.
அசாமில் 18 மாவட்டங்களில் 10 மாவட்டங்ளில் முஸ்லீம்களின் எண்ணிக்கைகணிசமாக அதிகரித்துதுள்ளது என்றார் சுதர்சன். நிகழ்ச்சியில் முன்னாள் மத்தியஅமைச்சர் அருண் ஷோரியும் கலந்து கொண்டு பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications