விமானத்தில் பெண்ணிடம் குறும்பு:நிரூபிக்க சொல்கிறார் கேரள குஜால் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

P.J.Hiseph

சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில்ஈடுபட்டதாக கூறப்படும் புகார் நிரூபிக்கப்பட்டால், அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் விலகத் தயார் என்று கேரள பொதுப்பணித்துறை அமைச்சர்பி.ஜே. ஜோசப் கூறியுள்ளார்.

இவர் கேரள காங்கிரஸ் (ஜோசப் பிரிவு) தலைவராவார். நீண்ட காலமாக இடதுசாரிக்கூட்டணியில் இடம் பிடித்துள்ளார்.

சென்னையிலிருந்து கொச்சி சென்ற கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்த அமைச்சர்ஜோசப், தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமி கோபகுமார் என்பவரைசீட்டுக்கு இடையே கையை விட்டு கட்டிப் பிடித்தார்.

இவர் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக முன்புபணியாற்றியவர். இப்போது சென்னையில் வசிக்கிறார்.

லட்சுமியின் பின் இருக்கையின் இருந்தபடி அவரை தோளைத் தொட்டும், இடுப்பைக்கிள்ளியும் வானத்திலேயே ஜிகில்பா வேலை செய்தார் அமைச்சர் ஜோசப்.

இதுகுறித்து விமான ஊழியர்களிடம் லட்சுமி புகார் கூறியும், அவர் அமைச்சர்,எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் கிடைத்துள்ளது.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இந்தபிரச்சனையை காங்கிரஸ் பெண்கள் பிரிவு கையில் எடுத்து போராட்டம் நடத்திவருகிறது.

இந் நிலையில் முதல்வர் அச்சுதானந்தானை சந்தித்த ஜோசப் தன் மீதானகுற்றச்சாட்டுக்கு விளக்கம் தந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டுபொய்யானது. காங்கிரஸ் கட்சியினரின் சதித் திடடமாகும் இது. நான் மது அருந்திவிட்டு விமானத்தில் ஏறியதாக கூறப்படுவது தவறு. மேலும், விமானம்கிளம்பும்போது எல்லோரும் பெல்ட் அணிந்திருப்பார்கள். அப்போது எப்படி எழுந்துநடமாடமுடியும்? (நடந்ததா யார் சொன்னா?)

இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்துமாறு முதல்வரை கேட்டுக் கொண்டேன்.விசாரணை நடத்தினால்தான உண்மை தெரியவரும். எனது 35 ஆண்டுகால அரசியல்வாழ்க்கையில் இப்படி ஒரு புகார் வந்ததில்லை.

புகார் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்தும், பொது வாழ்க்கையிலிருந்தும்விலகத் தயாராக இருக்கிறேன் என்றார் ஜோசப்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+