இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ப.சி.: ராமதாஸ்
விழுப்புரம்:
பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவோடு வெற்றி பெற்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தரவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் அதரவோடு தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் மட்டும் ஆதரவுதெரிவிக்காதது வருந்தத்தக்கது. என்எல்சியின் பங்குகளை தனியாரிடம் விற்பதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர்கருணாநிதி கையாண்ட விதத்தை, இட ஒதுக்கீட்டு பிரச்சனையிலும் மேற்கொண்டால் அவருக்கு ஆதரவாக பாமகநிற்கும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத அவலநிலைஏற்பட்டுள்ளது. இதை படிப்படியாக 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவதை கைவிட்டு, ஒரே தவணையில்நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் இதை நிறைவேற்ற வேண்டும். இதற்காக அவசர சட்டத்தை பிறப்பித்து மத்தியஅரசு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் ஊடகங்களின் போக்கை கண்டித்து சென்னையில்இம்மாதம் 25ம் தேதி பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். தேவைப்பட்டால் டெல்லிக்குசென்று அங்கு போராட்டம் நடத்துவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications