மத்திய அமைச்சரவை, காங். கூட்டணியிலிருந்து விலகியது தெலுங்கானா கட்சி
டெல்லி:
தனி தெலுங்கான மாநில கோரிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசு உரிய முறையில்பரிசீலிக்காததைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக்கூட்டணியிலிருந்தும் தெலுங்கான ராஷ்டிரீய சமிதி கட்சி விலகியுள்ளது.
ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியை தனியாக பிரிதது தனி மாநிலம் அமைக்கநீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையைகொள்கையாக வைத்து தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சிஉருவாக்கப்பட்டது. சந்திரசேகர ராவ் இக்கட்சியின் தலைவராக உள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கட்சி பெரும்வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகவிளங்கியது இந்தக் கட்சி.
தனி தெலுங்கானா குறித்து பரிசீலிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்ததால்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணி அரசில் இக் கட்சிசேர்ந்தது.
சந்திரசேகர ராவ் மற்றும் நரேந்திரா ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்களாகபொறுப்பேற்றனர். ஆனால் தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசுகண்டுகொள்ளவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங். காங்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திரசேகர ராவ் தொடர்ந்து பேச்சு நடத்திவந்தார். ஆனால், இவருக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் ஆந்திராவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ராஜசேகர ரெட்டிதனி தெலுங்கானா கோரிக்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
ஆனால், ராவின் தொடர் நெருக்கடிகளால் தனி தெலுங்கானா குறித்து பரிசீலிக்க ஒருகுழுவை அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு தொடர்ந்து ஆய்வு நடத்திக்கொண்டுள்ளது.
இந்த இழுத்தடிப்புகளால், தனி தெலுங்கானா மாநில கோஷத்தை முன் வைத்துபெரும் வெற்றி பெற்ற ராவ் கட்சிக்கு செல்வாக்கு சரிந்து வருகிறது. ஆனால், இதேகோரிக்கையை முன் வைத்து விஜய்சாந்தி உள்ளிட்ட சிலர் போராட்டங்களை நடத்திராவ் கட்சியின் வாக்கு வங்கியில் ஓட்டை போட்டு வருகின்றனர்.
தனி தெலுங்கானா அமைக்காமல் அடுத்த தேர்தல் வரை காங்கிரஸ் கூட்டணிஆட்சியில் நீடித்தால் ராவின் கட்சி காலியாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தபடி மத்தியகூட்டணியில் இருந்து விலகியுள்ளது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி.
இதைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து டி.ஆர். எஸ். அமைச்சர்கள் இருவரும்ராஜினாமா செய்தனர். இருப்பினும் இவர்களின் விலகலால் மத்திய அரசுக்கு எந்தவிதஆபத்தும் இல்லை.
கடந்த இரண்டரை ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலகும் முதல்கட்சி டி.ஆர்.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது முடிவு குறித்து சந்திரசேகர ராவ்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் தனித் தெலுங்கானா மாநிலம்அமைக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு பின்னர் மக்களைஏமாற்றி விட்டது காங்கிரஸ். மக்களை ஏமாற்றுவது காங்கிரசுக்கு புதிதல்ல.
இதனால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. தெலுங்கானா மாநிலத்தைஉடனடியாக அமைக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று முதல்காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்.
தெலுங்கானா மக்களின் நம்பர் ஒன் வில்லனாக காங்கிரஸ் மாறியுள்ளது. தெலுங்கானாமக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு முதுகில் குத்தி விட்டது. இதனால்தான் எந்தவித தாமதமும் செய்யாமல் உடனடியாக விலகி விட்டோம்.
எங்களது கோரிக்கையை வலியுறுத்தி தீவிரமாகப் போராடப் போகிறோம்.தெலுங்கானா மக்கள் தங்களது கோரிக்கையில் எந்த அளவுக்கு உறுதியாகஇருக்கிறார்கள் எனபதை காங்கிரஸுக்கும, நாட்டுக்கும் காட்டப் போகிறோம் என்றார்ராவ்.
மன்மோகன் சிங் அரசில் சந்திரசேகர ராவ் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,நிரேந்திரா ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராகவும் இருந்தனர்.
தனி தெலுங்கானா கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளதும்,இந்தக் கோரிக்கைக்கு நக்சல்களின் ஆதரவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது:
இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் டி.ஆர். எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இந் நிலையில் தெலுங்கான ராஷ்டிரீய சமிதி கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பிக்களும்லோக்சபாவில் சபாநாயகர் இருக்கைமுன் போராட்டத்தில் ஈடுபட்டதால்நாடாளுமன்றத்தை நடத்தமுடியாத அளவுக்கு ஸ்தம்பித்தது.
சபாநிாயகர்இருக்கை முன் கூடிய அவர்கள் காங்கிரஸ் அரசைக் கண்டித்து உரத்தகுரலில் கோஷம் எழுப்பினர்.
இதனால் சுமார் 25 நிமிடங்கள் அவை ஸ்தம்பித்துப் பானது. வெறும் நிான்குஎம்.பிக்கள் தான் என்றாலும் அவர்கள் போட்ட கோஷத்தால், கேள்வி நேரத்தைதொடங்க முடியாமல் சபாநாயகர் சோம்நாத் சாடடர்ஜி திணறினார்.
உங்களது இருக்கைக்கு செல்லுங்கள், உங்களது கோரிக்கை குறித்து விவாதிக்கஅனுமதிக்கிறேன் என்று அவர் கூறியும் நான்கு எம்.பிக்களும் தொடர்ந்து விடாமல்கோஷம் போட்டதால் கேள்வி நேரத்தை தொடங்க முடியாத நலை ஏற்பட்டது.
டி.ஆர்.எஸ். எம்.பிக்களின் செயலை கடுமையாக கண்டித்த சபாநாயகர், 11.25மணிக்கு கேள்வி நேரத்தைத் தொடங்கினார். ஆனாலும் டிஆர்எஸ் எம்பிக்கள்தொடர்ந்து கோஷமிட்டனர். 2 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டு அதற்குநெடுஞசாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பதில் அளித்த நிலையில் பாஜகஎம்.பிக்கள் எழுந்து, யார் பேசுவதும் தெளிவாக கேட்கவில்லை என்று கூறிகோஷமிட்டனர்.
இதனால் சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டி.ஆர். எஸ். எம்.பிக்கள் இப்படிதொடர்ந்து கோஷம் போட்டுக் கொண்டிருந்தால் சபையை எப்படி நடத்துவது என்றுகோபத்துடன் கேட்ட சபாநாயகர் சபையை ஒத்திவைத்து விட்டு விட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications