மும்பை விமானத்தில் தீவிரவாதிகள்?ஹாலந்தில் தரையிறக்கம்-12 பயணிகள் கைது
ஆம்ஸ்டர்டாம்:
ஹாலந்து நாட்டிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய விமானத்தில் தீவிரவாதிகள்இருப்பதாக எழுந்த சந்தேகத்தையடுத்து அந்த விமானம் போர் விமானங்களின்துணையுடன் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 12 பயணிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியர்களா என்று தெரியவில்லை.ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மும்பைக்கு நார்த்வெஸ்ட் விமானம்கிளம்பியது. இந்த விமான நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்ததாகும்.விமானத்தில்149 பயணிகள் இருந்தனர்.
விமானம் ஜெர்மனிமீது பறந்து கொண்டிருந்தபோது சில பயணிகளின் செயல்கள்விமான பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் சந்தேகத்தை அளித்தது.
செல்போன்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.இதனால் அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என அச்சம் விமானசிப்பந்திகளுக்கு எழுந்தது.
இதையடுத்து ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தைத் தொடர்புகொண்ட விமானிகள்,விமானத்தைக் கடத்த முயற்சிகள் நடப்பதாக சந்தேகிக்கிறோம். உடனடியாகவிமானத்தை ஆம்ஸ்டர்டாமில் தரையிறக்க வேண்டும். பாதுகாப்புக்காக போர்விமானங்களையும் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர்குவிக்கப்பட்டனர். சிறிது நேரததிற்கு விமான நிலையம் மூடப்பட்டது. எப்.16 ரகபோர் விமானங்கள் விண்ணில் பாய்ந்தன.
அந்த போர் விமானங்களின் பாதுகாப்புடன், நாட்வெஸ்ட் விமானம் ஆம்ஸ்டர்டாமில்பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிப்படையினர் விமானத்திற்குள்புகுந்து சம்பந்தப்பட்ட 12 பயணிகளையும் சுற்றி வளைத்து கீழே இறக்கினர்.
விசாரணைக்குப் பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும்அவர்கள் யார்?, தீவிரவாதிகளா என்பது குறித்து போலஸீார் எதுவும்தெரிவிக்கவில்லை.
ஆனால், அவர்கள் அனைவரும் தெற்காசியர்கள் என்று கூறப்படுகிறது.
விமானத்தில் சந்தேகப்படும்படியான பொருட்கள், வெடிபொருட்கள் எதுவும்கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீதியால் ஆம்ஸ்டர்டாம்விமான நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications