திமுக-அதிமுக கடும் வாதம்: கருணாநிதி ஆவேசம்
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த முதல்வர் கருணாநிதி எனதுமுதல்வர் பதவியை தூக்கி எறிந்து விட்டு விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்என்று கூறியதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது, அதிமுக உறுப்பினர் கருப்பசாமிஒரு வார்த்தையைக் குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.அப்போது அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து திமுகஉறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.
இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களும், அமைச்சர்கள் சிலரும் சேர்ந்துஆளாளுக்கு கடுமையாக பேசினர். பலர் ஒருமையில் பேசியதால் சபையில் பெரும்அமளி நிலவியது.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா, செங்கோட்டையன் பேசியவார்த்தையிலிருந்து, கடைசியாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்பேசியது வரையிலான வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றுசபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசினார். அவர் கூறுகையில்,மேலும், மேலும் இந்த சபை அசிங்கமாக்கப்படுகிறது. ஆளுங்கட்சி உறுப்பிறனர்கள்வீடு பற்றி குறிப்பிட்டதற்கு கருப்பசாமி பதில் சொன்ன விதம் தான் இந்த விளைவைஏற்படுத்தியது. எனவே அந்த வார்த்தையிலிருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்பேசியது வரையிலான வார்த்தைகளை நீக்க வேண்டும்.
இந்த அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை நான்சொல்கிறேன். அது வேண்டாம் என்று அவர்கள் விரும்பினால், என்னிடம்உள்ளஆதாரங்களை கையெழுத்துப் பிரதிகளை, கடிதங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன்வரத் தயார்.
முதல்வர் என்ற கவுரவத்தை பதவியை மறந்து விட்டு கூட நான் வாதிட தயாராகஇருக்கிறேன் என்று ஆவேசமாக கூறினார் கருணாநிதி.
இதைதத் தொடர்ந்து கருப்பசாமி முதல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதுவரையிலான வாரத்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர்ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications