டிவி டைரக்டர் காதல் டார்ச்சர்: ராதிகா தந்த ஷாக்- நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி
சென்னை:
![]() |
டிவி தொடர் இயக்குனர் தந்த காதல் டார்ச்சர் காரணமாக நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்குமுயன்றார்.
பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண் விஜயலட்சுமி. அங்கு பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். விஜய், சூர்யா நடித்தபிரண்ட்ஸ் படம் மூலமாக தமிழுக்கும் வந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில்நடித்துள்ளார் விஜயலட்சுமி.
பார்க்க மிக லட்சணமாக இருந்தாலும் தொடர்ந்து இளம் ஹீரோக்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபு,சத்யராஜ், பார்த்திபன், மோகன்லால் ஆகிய மூத்தாருடனும், குணால் போன்ற சப்பை நடிகர்களுடனும் தான் நடிக்க சான்ஸ்கிடைத்தது. சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் முழுவதுமாகவே குறைந்து விட்டன.
இதையடுத்து டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜயலட்சுமி. இப்போது சூர்யவம்சம் என்ற கன்னட டிவி தொடரிலும்,உதயா டிவியில் ராதிகாவின் ராடன் டிவி நிறுவனம் தயாரித்து வழங்கும் தங்கவேட்டை என்ற கேம் ஷோவிலும் நடித்துவருகிறார்.
![]() |
சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் பெற்றோருடன் தங்கியுள்ள விஜயலட்சுமி புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவர்எழுந்திருக்கவில்லை. அவரை பலமுறை எழுப்பிப் பார்த்தும் எழாததால், அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைஒன்றுக்குக் கொண்டு சென்றனர். அங்கு விஜயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன்இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ராடன் டிவியின் கேம் ஷோ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் இயக்குனர் ரமேசுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபித்துக்கொண்டு வெளியேறிய விஜய்லட்சுமி தூக்கமாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இது குறித்து பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம்விஜய்லட்சுமி கூறுகையில்,
ராடன் டிவி இயக்குனர் ரமேஷ் என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். நான்மறுத்துவிட்டேன். காரணம் எனக்கு இந்தக் காதலில் விருப்பம் இல்லை, காதலை எங்கள் வீட்டில் ஏற்கவும் மாட்டார்கள். இதைசொன்ன பிறகும் கூட ரமேஷ் எனக்கு தொடர்ந்து தொல்லை தந்தார். அவரை காதலிக்க மறுத்ததால் படப்பின்போது என்னைபெயர் சொல்லி அழைப்பது, திட்டுவது என்று டார்ச்சர் செய்தார்.
![]() |
என்னை துன்புறுத்தாதீர்கள் என்று பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. தொடர்ந்து தொல்லை தந்தார். இதையடுத்து ராடன்டிவி நிறுவன அதிபர் நடிகை ராதிகாவிடம் சென்று புகார் செய்தேன். அவரே, ரமேஷையே திருமணம் செய்து கொள்ளும்படிவற்புறுத்தினார். ராடன் டிவி நிர்வாகிகளும் ரமேசுக்கு சாதகமாகவே பேசினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார் ரமேஷ். இதனால் மனம் வெறுத்துப் போய்தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.
கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 டிவி நடிகைகள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர்தற்கொலைக்கு முயன்றிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications