உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் தெலுங்கானா தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தெலுங்கானா மாநிலம் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்ததெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தேசியவாத காங்கிரஸ்கட்சித் தலைவர் சரத் பவார் தலையீடு காரணமாக தனது போராட்டத்தை வாபஸ்பெற்றார்.

தெலுங்கானா மாநிலக் கோரிக்கையை கண்டு கொள்ளாத காங்கிரஸைக் கண்டித்துஅமைச்சரவையிலிருந்தும், காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் டி.ஆர்.எஸ். விலகியது.இதையடுத்து சந்திரசேகர ராவ் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கால வரையற்றஉண்ணாவிதரப் போராட்டத்தில் குதித்தார்.

நேற்று 2வது நாளாக அவர் உண்ணாவிரத்ததைத் தொடர்ந்தார். இதனால் அவரதுஉடல்நிலையல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு மத்திய அமைச்சர் சரத்பவார் சந்தரசேகர ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டத்தை முதலில் வாபஸ் பெறுங்கள். காங்கிரஸ் கூட்டணியல் உள்ளஅனைத்துக் கட்சிகளும் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர். சபாநயகரும் உங்களைவாபஸ் பெறுமாறு கோரியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தான்போராட்டத்தை நடத்த முடியும் என்று பவார்கூறவே அதை ராவ் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து பழச்சாறை பவார் கொடுக்க அதை வாங்கி ராவ் குடித்து தனதுபோராட்டத்தை முடித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+