சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 3 தளங்கள் இடிப்பு!
சென்னை:
பிரபல சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெறாத 3 தளங்களை இடிக்கும்பணி இன்று தொடங்கியது.
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி நிறுவனம்உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருச்சி ஆகியஊர்களிலும் கிளைகள் உள்ளன.சென்னையில் புதிதாக 4 மாடி கட்டடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ) அனுமதி கோரியது சென்னை சில்க்ஸ். சி.எம்.டி.ஏவும்அனுமதி வழங்கியது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட 4 மாடிகள் தவிர மேலும் 3 மாடிகளை கட்டியது சென்னைசில்க்ஸ் நிறுவனம். இதையடுத்து அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3 தளங்களைஇடிக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சில்க்ஸ் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சென்னை சில்க்ஸ்.இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மேலும், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3 தளங்களையும் இடித்துத் தள்ளுமாறும்உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 4, 5மற்றும் 6வது தளங்களை இடிக்கும் பணி தொடங்கியது.
பலத்த பாதுகாப்புடன் இடிக்கும் பணியை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர்.இன்னும் 3 நாட்களுக்குள் இடிக்கும் பணி முடிந்து விடும் என அவர்கள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications