பிற்பட்டோர் இட ஒதுக்கீடு: ராமதாசுடன் இணைந்து போர்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் நானும் ராமதாசும் தொடர்ந்து போர் நடத்துவோம், வெற்றிபெறுவோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் நானும் ராமதாசும் தொடர்ந்து போர் நடத்துவோம், வெற்றிபெறுவோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. இதில் பாமக நிறுவனர்டாக்டர் ராமதாசும் கலந்து கொண்டார். அந்த விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

இட ஒதுக்கீடு வரலாறு நெடியது. பிரதமர் இல்லத்தில் பேசும்போது பிற்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்திவிடலாம் என்று உறுதியளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத் தொடரிலேயே 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றுவோம் என்று கூறியபிறகும் ஏன் இந்தத் தாமதம்? தயக்கம்?. அதற்குப் பின் எதற்காக ஒரு குழு? இடையில் என்ன நடந்தது?

இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு, அன்புமணி போன்றவர்கள் கடும்வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை ஏன்?

60 சதவீத பிற்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தர முடியாது என்று வெறும் 5 சதவீதமே வசிக்கும் ஒரு பிரிவின்கூறுகின்றனர். அரசை நெருக்குகின்றனர். இன்று பிற்பட்டோர் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இந்தக் கரியைதுடைக்க வேண்டியது முதல்வர் கருணாநிதியின் கடமை என்றார் ராமதாஸ்.

இதையடுத்து கருணாநிதி பேசுகையில்,

இது காதல் திருமணம் மட்டுமல்ல, கலப்புத் திருமணம். நானும் ராமதாசும் சம்பந்தியாகிவிட்டோம் என்று மத்தியஅமைச்சர் வேலு கூறினார். இந்தத் திருமணத்துக்குப் பிறகு தான் என்றில்லை. ஏற்கனவே சம்பந்தி ஆனவர்கள்தான், அரசியல்ரீதியாக.

இங்கே ராமதாஸ் பேசும்போது இட ஒதுக்கீடு தொடர்பாக சில வருத்தங்களை வெளியிட்டார். இந்த வருத்தங்கள்நிலையானதாக இருக்க முடியாது. இட ஒதுக்கீடு, சமூக நீதி சரித்திரம் 50 ஆண்டுக்கு மேற்பட்டது. இதில்எத்தனையோ சோதனைகள், பின்னடைவுகளை சந்தித்து வெற்றிகளைக் கண்டுள்ளோம்.

இன்று இந்த அளவுக்காவது நாடும், பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேறி வந்ததற்குக் காரணம்பெரியார், அண்ணா, காமராஜர் போன்றவர்கள் ஆற்றிய பணி தான். ஆனாலும் இந்த நேரத்தில் நாம் ஒரு முழுவெற்றியை பெற்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் ராமதாஸைப் போலவே எனக்கும் உண்டு.

இது பற்றி நிருபர்கள் கேட்டபோது, நானும் ராமதாசும் நேரில் சந்தித்துப பேசினால் தெளிவான நிலை ஏற்படும்என்றேன்.

இன்று நாம் களத்தில் தோற்றிருக்கலாம், உறுதியோடு போராடி போரில் நிச்சயம் வெல்வோம்.

இட ஒதுக்கீடு தொடர்பாக 50 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நேரு திருத்தம் கொண்டு வந்தபோதுசமூகரீதியாகவும் கல்வியிலும் என் இரண்டு நிலை போதும் என்றார்.

அப்போது பார்லிமெண்டில் பொருளாதாரரீதியாகவும் என்று ஒரு குரல் எழும்பியது. ஆனால், இட ஒதுக்கீட்டைபொருளாதாரரீதியாக ஆராய முடியாது என்று நேரு சொன்னார்.

ஆனால், இன்று இடையில் வந்து புகுந்துள்ள சில கருத்துக்களின் காரணமாக, சில நண்பர்களின் காரணமாக, எதுவேண்டாம் என அகில இநிய அளவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்ள் பிரதிநிதியாகிய நாம்விரும்புகிறோமோ, அதற்கு நேர் மாறாக ஒன்று நடந்துள்ளது.

ஆனாலும் அதை மாற்றும் மன வலிமை நமக்கு உண்டு. அதற்காக மக்களைத் திரட்டும் வலிமையும் நமக்குஉண்டு. அந்த ஆறுதலுடன் நானும் ராமதாசும் போர்க் களத்தை தொடர்ந்து நடத்தி பிற்பட்டவர்களுக்கு முழுஉரிமையும் கிடைக்கச் செய்வோம்.

நம் வேகத்தை ஆற்றலை இந்தப் போர்க் களத்தில் காட்டி வெற்றி பெறுவோம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+