டெல்லி: இலங்கை தூதரகம் முன்பு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
டெல்லி:
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்துவருவதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்புவைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை ராணுவத்தின் வெறித்தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் உள்ள இலங்கைதூதரகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக அறிவித்திருந்தது.அதன்படி டெல்லியில் மதிமுகவினர் திரளாக கூடினர்.டெல்லியில் உள்ள தமிழர்கள் பலரும் மதிமுகவினருடன் கலந்து கொண்டனர்.சாணக்கிய புரியில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய அவர்களுக்கு வைகோ தலைமைதாங்கினார். அவைத் தலைவர் எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரன், சிப்பிப்பாறைரவிச்சந்திரன், டாக்டர் கிருஷ்ணன் ஆகிய எம்.பிக்கள் உள்ளிட்டி ஆயிரக்கணக்கானதொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
தெற்கு அவென்யூ பகுதியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு பேரணிமுடிந்தது.அங்கு இலங்கை அரசைக் கண்டித்து வைகோமுழங்க தொண்டர்கள் திரும்பமுழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி தூதரகம் அருகே பாதுகாப்புபலப்படுத்தப்பட்டிருந்தது. தூதரகத்திற்கு 200 மீட்டர் முன்பே அனைவரும் தடுத்துநிறுத்தப்பட்டனர். மீறிப் பானால் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார்அறிவித்தனர்.
மேலும், வைகோவை அணுகிய டெல்லி போலீஸ் துணை ஆணையர் அனந்தமோகன்,தடுப்பைத் தாண்டி செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். அதை வைகோவும்ஏற்றுக் கொண்டார்.பின்னர் சிறிது நேரம் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது வைகோ பேசுகையில், இலங்கைத் தமிழர்களின் துயரிலும், கண்ணீரிலும்நாங்கள் பங்கேற்கிறோம். அவர்கள் அனாதைகள் அல்லர் என்பதை தெரிவிக்கவேஇந்த அறவழிப் போராட்டம்.இலங்கைத் தமிழர்களை கருவறுக்க நினைக்கிறது சிங்களஅரசு. அதைநாங்கள்அனுமதிக்க மாட்டோம்.
தமிழக சட்டசபையில் செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து தீர்மானம்நிறைவேற்றியதைக கண்டித்துள்ளார் சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதர்.வெளிநாட்டுத் தூதர் ஒருவர் இப்படி நடந்து கொண்டதாக வரலாறே இல்லை.
எனவே உடனடியாக அவரை நாட்டை விட்டு இந்திய அரசு வெளியேற்ற வேண்டும்.செஞ்சோலையில் 61பச்சிளம் குழந்தைகளை குண்டு வீசிக் கொன்றுள்ளனர். இந்தகாட்டுமிராண்டித் தாக்குதல் உலக மக்களின் கண்களை திறந்து வைத்துள்ளது.
தமிழர்கள் நலனை சிங்களஅரசு ஒருபோதும்மதித்தது கிடையாது. சுனாமியால்பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிய பிரான்ஸ் அமைப்பின் ஊழியர்கள் 17 பேரைகொன்றனர். முன்னாள் எம்.பி சின்னத்தம்பி சிவராஜாவையும் கொன்றனர்.
இந்திய ராணுவத்தின் உதவியை நாடுகிறார் ராஜபக்ஷே. அவருக்கு இந்தியா ஒருஉதவியையும் செய்யக் கூடாது. வாஜ்பாய் பிரதமராக இறுந்த போது இலங்கைக்குஉதவுவதில்லை என்று தீர்மானமே போட்டார். அப்படிப்பட்ட தீர்மானம் இப்போதும்போடப்பட வேண்டும் என்றார் வைகோ.
பின்னர் பிரதமரை சந்திக்க வைகோ தலைமையில் மதிமுக எம்.பிக்கள் சென்றனர்.
சம்பூரில் ராணுவம், விடுதலைப் புலிகள் கடும் மோதல்
இதற்கிடையே, திரிகோணமலை அருகே உள்ள முக்கியமான பிராந்தியமானசம்பூரைப் பிடிக்க ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் ராணுவத்தின்தாக்குதலை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
திரிகோணமலை துறைமுகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து புலிகள் வெளியேற வேண்டும் என ராணுவம்எச்சரித்தது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டனர்.
இதையடுத்து திரிகோணமலை அருகே உள்ள சம்பூரைமீட்க ராணுவம் தாக்குதலைதொடங்கியுள்ளது. ராணுவத்திற்கு உதவியாக விமானப் படை மற்றும் கடற்படையும்தாக்குதலில்குதித்துள்ளது. ஆனால் ராணுவத்தின் மும்முனைத் தாக்கதலைவிடுதலைப்புலிகள் முறியடித்து விட்டனர்.
இதையடுத்து அனுராதாபுரத்திலிருந்து கூடுதல் படைகளை ராணுவம்வரவழைத்துள்ளது. கூடுதல் படையுடன் ராணுவம் புதிய தாக்குதலைதொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் சண்டை நடந்து வருகிறது.ஆனால் ராணுவத்தரப்பில் இதுவரைமுன்னேற்றம் ஏதும் இல்லை.
இதற்கிடையே மட்டக்களப்பில் ராணுவமுகாம் மீது புலிகள் திடீர பீரங்கித் தாக்குதலைநடத்தினர். இதில் ஏற்பட்டபாதிப்புகள் குறிதத விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே திடீர் பயணமாக இங்கிலாந்துசென்றுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இங்கிலாந்து நாட்டின்ஆதரவைபெறும்முயற்சியே இது என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications