சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்புமகன் சுதாகரன் திருமணம்குறித்தும், அதிமுக-மதிமுக கூட்டணி குறித்தும் ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ.காந்தி பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர்இருக்கை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து காந்தியின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது காந்திபேசுகையில், அதிமுக-மதிமுக கூட்டணியை விமர்சித்துப் பேசினார். பின்னர்முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் மெகா திருமணம் குறித்தும் பேசினார். அதன்விவரம்:காந்தி: அதிமுக ஆட்சியில் என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
செங்கோட்டையன் (அதிமுக): காந்தி அரசியல் பேசுகிறாரா? மானியக் கோரிக்கை மீதுபேசுகிறாரா?
அமைச்சர் பொன்முடி: கடந்த காலத்தில் நடந்தததை மனசாட்சிப்படி எண்ணிப்பாருங்கள். என்னவெல்லாம் பேசப்பட்டு அவையில் பதிவானது தெரியுமா?
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்கள் மறுபடியும்அப்படித்தான் பேசுவோம் என்று சொல்வது போல உள்ளது. நாங்கள் கடந்த காலத்தில்பேசியதை சிந்தித்து பார்க்கும் நிலையில் இல்லை.
காந்தி: கடந்த 5 ஆண்டுகளாக அம்மா, அம்மா என்று பேசினீர்கள். இப்போதும்அம்மா, அம்மா என்கிறீர்களே.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கும்பலாகஎழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காந்தியின் பேச்சு ஆபாசமாக இருப்பதாக கூறியஅவர்கள் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரினர். ஆனால்சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
காந்தி: நான் எந்த இடத்திலும் யாரையும் கேலியாக பேசவில்லை.
இப்படி சொல்லிவிட்டு ஒரு உதாரணத்தை காந்தி தெரிவித்தார். இதற்கு அதிமுகவினர்மீண்டும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக எம்எல்ஏக்களில் பலர் ஆவேசமாககத்தினர். அதிமுகவினர் சபையின் மையப் பகுதிக்கு வந்தனர். சபாநாயகர் அருகேவந்து காந்தி எப்படி இவ்வாறு பேசலாம். இது நியாயமா? என்று கேள்வி எழுப்பினர்.
பின் வரிசையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம்விசுவநாதன், செ.ம.வேலுச்சாமி, சேலம் ரவிச்சந்திரன், சேகர்பாபு ஆகியோர் முன்பக்கமாக வந்து சபாநாயகரிடம் சத்தம் போட்டு பேசினர்.
இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கோஷமிட்டனர். அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்து ஆவேசமாகபேசினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது.
சபாநாயகரிடம் நியாயம் கேட்பதாகக் கூறியவாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,சபையின் மைப் பகுதியில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள்பலராமன், செந்தில், பாலாஜி உள்பட சிலரும் எம்எல்ஏக்களும் சபாநாயகர் இருக்கைஅருகே தரையில் உட்கார்ந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். காந்திபேசிய ஆட்சேபகரத்துக்கு உரிய பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிசர்ச்சைக்கு முடிவு கட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது எழுந்த முதல்வர் கருணாநிதி,
இதையடுத்து காந்தியின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார் சபாநாயகர்ஆவுடையப்பன். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கைகளுக்குத் திரும்பினர்.அவையில் அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications