தனித்துப் போட்டி என்று சொன்னால் தான் சுவாரஸ்யம்: விஜயகாந்த்
திருச்சி:
தனித்துப் போட்டி என்று சொல்லிக் கொண்டிருந்தால் தான் அதில் ஒரு சுவாரஸ்யம்இருக்கும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்.
கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் திருச்சிக்கு வந்திருந்தார்.அப்போது, விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள், தனித்துப் போட்டி என்று தொடர்ந்துகூறி வருகிறீர்களே என்று கேட்டனர்.அதற்கு விஜயகாந்த், அப்படிக் கூறினால் தான் ஒரு சுவாரஸ்யம் இருக்கும், நீங்களும்கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், அப்படியானால் வெறும் சுவாரஸ்யத்திற்காகத்தான் இப்படிப் பேசி வருகிறீர்களா என்று கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள்என்றார் விஜயகாந்த்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபையில், முக்கியத்தலைவர்கள் (இப்போது ஜெயலலிதா, முன்பு கருணாநிதி) பங்கேற்காதது அவர்களதுகட்சிப்பணி தொடர்புடையது. அவரவருக்குத் தான் தெரியும் அவர்களின் வலி.
பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியவர்களை முதல்வர் கடுமையாக சாடியுள்ளார்.அதில் எந்தத் தவறும் இல்லை.
காஸ், கலர்டிவி போன்ற திட்டங்களுக்கு மக்களுக்கு கூடுதல் சுமையைத்தான்ஏற்படுத்துமே தவிர அவர்களுக்கு உதவாது. மாத மாதம் இதற்கென இனி தனியாகசெலவு செய்ய வேண்டி வரும். எனவே மக்களை மேம்படுத்தக் கூடிய திட்டங்களைத்தான் அமல்படுத்த வேண்டும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications