காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலில்100 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றுகும்பாபிஷேகம் நடந்தது.

காஞ்சிபுரத்தில உள்ள கோவில்களில் மிகப் பிரபலமானது ஏகாம்பர நாதர் கோவில்.இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக கும்பாபிஷேகம்நடந்தது.

அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறாமலேயே இருந்து வந்தது. இதையடுத்துநான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 கோடி செலவில் புனரமைப்பு பணிகள்தொடங்கின.

இந்தப் பணிகள் முடிந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகநடைபெற்றது.

யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், மகாபூரணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றன.அதைத் தொடர்ந்து 18 கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில்180 சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏகாம்பர நாதரை வணங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+