For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடக்கும்: அமெரிக்கர்கள் அச்சம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவில் மீண்டும் ஒரு தீவிரவாதத் தக்குதல் நடைபெறலாம் என அமெரிக்க மக்களிடையே அச்சம்நிலவுவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கர்களிடையே தீவிரவாத தாக்குதல் அபாயம்உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினசரி பயத்துடனேயே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும், சமீபத்தில்இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களை கடத்தி வெடிக்கச் செய்யும் சதித் திட்டம்வெளியானதிலிருந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் பீதி மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அமெரிக்கர்களிடையேதீவிரவாத அபாயம் குறித்து என்ன கருத்து நிலவுகிறது என்பது குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலனோர் இன்னும் ஒரு பெரிய தாக்குதல் அமெரிக்காவில் நடக்கலாம்என கருத்து தெரிவித்துள்ளனர். ரயில், பேருந்து போக்குவரத்தை சீர் குலைக்கும் விதமாக இந்த தாக்குதல்நடைபெறலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கர்களிடையே இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதற்க்கு முக்கிய காரணம் நியூயார்க் தாக்குதலில்தொடர்புடயை யாரும் இதுவரை பிடிபடாததும், தண்டிக்கப்படாததுமே முக்கிய காரணம்.

குறிப்பாக நியூயார்க் நகர மக்கள் இடையே தான் தீவிரவாத அச்சம் அதிகம் நிலவுகிறது. கருத்துக் கணிப்பில்கலந்து கொண்டவர்களில் 59 சதவீதம் பேர் நியூயார்க் தாக்குதலையடுத்து அதிபர் புஷ் எடுத்த நடவடிககைகள்திருப்தி தருவதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் தீவிரவாதத் தாக்குதலால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாக 43 சதவீதம் பேர் கருத்துதெரிவித்துள்ளனர். ஆகஸட் 7ம் தேதிக்கும் 9ம் தேதிக்கு இடையில் ஒரு கருத்துக்கணிப்பும், 15 மற்றும் 17ம்தேதிக்கு இடையே இரண்டாவது கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது.

நியூயார்க் தாக்குதலுக்குப் பிறகு தங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருத்து கணிப்பில்கலந்து கொண்டவர்களில் பாதிப்பேர் தெரித்துள்ளனர். முன்பை விட தற்போது தாங்கள் மிகவும் உஷாராகஇருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானபயணத்தை தாங்கள் தவிர்ப்பதாக கணிசமான பேர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தோடு அதிக நேரத்தைசெலவிட விரும்புவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X