குடிக்காதீங்க, விசில் அடிக்காதீங்க: அன்புமணி அட்வைஸ்!
சென்னை:
இளைஞர்கள் குடிக்கக் கூடாது, விசில் அடிக்கக் கூடாது, தினம் குளிக்க வேண்டும்,முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிபாமக இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பாமக இளைஞர் சங்க மாநில பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில்கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சரும், இளைஞர் சங்க மாநிலத்தலைவருமான அன்புமணி ராமதாஸ், இளைஞர்களுக்கு ஏகப்பட்ட அறிவுரைகளைவழங்கினார்.அன்புமணி பேசுகையில், நமது கட்சிக்குத் தான் தமிழகத்தில் அதிக அளவிலானஇளைஞர்கள் தொண்டர்கள் உள்ளனர். சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது 10வயது சிறுவன் கையில் பாமக கொடியுடன் வந்திருந்தான். டாக்டர் ராமதாஸுக்காகஉயிரையே விடுவேன் என்று அவன் கூறியதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீரேவந்து விட்டது. இப்படிப்பட்டவர்கள் தான் நமக்கு வேண்டும்.
இளைஞர்கள் முதலில் சுத்தமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தினசரி குளிக்கவேண்டும். முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும். விசில் அடிப்பதை சுத்தமாகமறந்து விட வேண்டும். வேகமான, வீரமான, விவேகமான, வெறி பிடித்தஇளைஞர்கள் தேவை.
நிமது சமுதாய இளைஞர்களால் பாமகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே நீங்கள்தான்எதிர்காலம். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் துடிப்புள்ள ஆயிரம்இளைஞர்களை திரட்டுங்கள். ஊர்களில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாகஓடிப் போய் உதவி செய்ய முயலுங்கள்.
பாமக இளைஞர் சங்கத்திற்காக இணையதளம் ஒன்றையும் தொடங்கியுள்ளோம.அதன் மூலம் தினசரி நான் உங்களை சந்திப்பேன். இதற்காக விஞ்ஞான பூர்வமாகஉங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. யோகா பயிற்சியும் முக்கியம். உடல்பயிற்சி, உள்ளப்பயிற்சி, மனப் பயிற்சிஆகியவையும் அளிக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்குள் ஆயிரம் ஏரிகளை நீங்கள் தூர் வார வேண்டும். ஆயிரம்தடுப்பணைகளை கட்ட வேண்டும். பசுமைத் தாயகம் மூலம் 7லட்சம் மரக்கன்றுகளைநட்டுள்ளோம். இது போதாது 70 லட்சம் மரக் கன்றுகள் நடவேண்டும்.
டாக்டர் ராமதாஸ் 30 ஆண்டுகளாக சமூக நீதிக்காக போராடி வருகிறார். 35 முறைசிறை சென்றுள்ளார். படிக்கும் போது கல்விக் கட்டணம் செலுத்த வழி இல்லாததால்,டியூஷன் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து படித்துள்ளார். சமூக நீதிக்காகபாடுபடும் ஒரே தலைவர் அவர் தான். ஆயிரம் ஆண்டுகள் போனாலும்அவரைப்போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்.
நான் உங்களில் ஒருவன். அமைச்சர் பதவி வரும்,போகும். ஆனால் நீங்கள் தான்நிரந்தரமானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காக எனது பதவியையும் துறக்கத்தயார். எனது உயிரையும் கொடுக்கத் தயார். இதை நான் டாக்டர் ராமதாஸிடம்சொல்லிய போது அவர் பாராட்டினார் என்றார் அன்புமணி.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications