சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகள்: ஜெ. சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தர்ப்பத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாக கம்யூனிஸ்ட்கட்சியினர் திழ்கிறார்கள் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றஉறுப்பினர்களை பெருமைப்படுத்தும் வகையில், சென்னை ராயல் மெரீடியன் என்றநட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ள விருந்து நிகழ்ச்சிக்கு வருமாறு எனக்குஅழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும் போது சட்டமன்ற உறுப்பினர்களைகவுரப்படுத்தும் வகையில் இதுபோன்ற விருந்துகளை முதலமைச்சர் பொறுப்பில்இருப்பவர்கள் அளிப்பது மரபு. நானும் எனது 1991-96 ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற மரபு வழி விருந்துகளை அளித்துள்ளேன்.

கடந்த 2001-06 காலத்தில் நான் முதலவராக இருந்தபோது இதே போன்ற ஒருவிருந்துக்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தலைவரான ஹேமச்சந்திரன்சட்டசபையிலேயே இதை கடுமையாக கண்டித்தார்.

ஏழைகளெல்லாம் வறுமையில் வாடுகின்ற நிலையில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில்முதல்வர் விருந்து கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்றுபேசினார். அதனால் அந்த விருந்து நிகழ்ச்சியை நான் ரத்து செய்து விட்டேன்.

இன்றைக்கு திமுக அரசின் முதல்வர் கருணாநிதி அளிக்கின்ற விருந்தில், மார்க்சிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மிக மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளஇருக்கின்றனர். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஏழை மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். வறுமையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கருணாநிதி அளிக்கும் விருந்து, அவரது சொந்தப் பணத்திலிருந்தா அளிக்கிறார்?இல்லையே, மக்கள் வரிப்பணத்தில் தானே? இப்போது மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள்இதை எப்படி ஏற்றுக்கொள்கின்றன?

எந்த ஒரு நிகழ்வுக்கும், யார் முதல்வர் என்று பார்த்து, அதற்கேற்ப தங்களதுகருத்துக்களையம், விமர்சனங்களையும் வைத்து, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தங்களதுகொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்களைப்பொறுத்தவரை, நான் எதைச் செய்தாலும் தவறு, கருணாநிதி செய்தால் எல்லாமே சரி.எனனே கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைப் பற்று என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பிரியாணியுடன் அமர்க்கள் விருந்து: இதற்கிடையே, சட்டசபை உறுப்பினர்களுக்குநேற்று மாலை முதல்வர் கருணாநிதி லி ராயல் மெரீடியின் ஹோட்டலில் விருந்துஅளித்து உபசரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+