முல்லைப் பெரியாறு: பிரதமரை சந்திக்கிறார் கருணாநிதி!
சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்திக்கத்திட்டமிட்டுள்ளதாக சட்டசபையில் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று சிபிஐ தலைவர் சிவபுண்ணியம் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.அப்போது அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர்தலைமையிலான குழு பிதமரை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார்.இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், முதல்வர் கருணாநிதியும், விரைவில்பிரதமரை சந்திக்கவுள்ளார். இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். கேரளாவைச் சேர்ந்த சில அரசியல்கட்சிகள், பத்திரிகைகள், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினையை தேவையில்லாமல் ஊதிவிட்டு வருகிறார்கள்.
பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இவற்றுக்கு தமிழக அரசு பதில் அளிக்கவிரும்பவில்லை. இவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடப் போவதில்லை.நமது பக்கம் நீதி, நியாயம் உள்ளது. எனவே அமைதி காத்து பிரச்சினையை சுமூக முடிக்க வேண்டும் என்பதேதமிழக அரசின் நிலையாகும் என்றார் துரைமுருகன்.
சிபிஐ தலைவர் கோவிந்தசாமி பேசுகையில், கேரள அரசுடன் பேச்சு நடத்தி இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும். இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண ஆர்வமாக இருப்பதாக கேரள முதல்வர்அச்சுதானந்தன் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்திருந்தபோது தெரிவித்திருந்தார்.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவு கெட்டு விடாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசுமுயற்சிக்க வேண்டும் என்றார். அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், முல்லைப் பெரியாறு அணைவிவகாரத்தில் தமிழகத்தின் உரிமை எள்ளளவும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. அதில் தமிழக அரசுஉறுதியாக இருக்கிறது.
பிரதமரை கேரள குழு சந்தித்தபோது, கேரள முதல்வரும், அம் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்துபிரதமரிடம் மனு கொடுத்தனர். அந்த நிலை தமிழகத்தில வரவே வராது. அதுதான் தமிழக மக்களின் தலைவிதிஎன்றார் துரைமுருகன்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications