மத்திய சிறையில் இடி விழுந்து கைதி கருகி பலி!
சென்னை:
சென்னை மத்திய சிறையில் இடிதாக்கியதில் விசாரணைக் கைதி உடல் கருகிபரிதாபமாக இறந்தார்.
சென்னை நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல்3 மணிக்கு மேல் திடீர் என பலத்த மழைபெய்தது.நகரின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழை, மத்திய சிறை பகுதியிலும்பலமாக கொட்டியது.மழையுடன் இடியும், மின்னலும் வெட்டியதால், சிறை வளாகத்திற்குள் ஒருவிசாரணைக் கைதி பரிதாபமாக இடி தாக்கி இறந்தார். அவரது பெயர் முரளி.திருத்தணியைச் சேர்ந்தவர்.
துவைத்து வைத்திருந்த துணியை எடுப்பதற்காக வெளியே வந்தபோது முரளி மீதுஇடியும்,மின்னலும் தாக்கியது. இதில் உடல் கருகி சுருண்டு விழுந்தார் முரளி.உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முரளி பரிதாபமாக இறந்து போனார்.
இறந்த முரளி திருவள்ளூர்போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம்8ம் தேதிதான் சிறையில் அடைக்கப்பட்டார். திருத்தணி பர்மா காலனியைச்சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன், டிஐஜி செந்தூர்பாண்டியன், எஸ்.பி.துரைசாமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிற்பகல் 2.10 மணிக்குஇச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.
முரளி, வெளியில் காயப் போட்டிருந்த தனது துணியை எடுத்துக் கொண்டுஅப்படியே சாப்பாடு வாங்குவதற்காக சமையலறைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது தான் அவரை இடி தாக்கியது. அத்தோடு மின்னலும் சேர்ந்து தாக்கியதால்சுருண்டு விழுந்து விட்டார்.
அவரை இடி தாக்கிய இடத்திற்கு சிறிது தூரத்தில் தான் 5 கைதிகள் மரத்தடியில்மழைக்காக ஒதுங்கி நின்றிருந்தனர். ஆனால் நல்ல வேளையாக அவர்களுக்குஒன்றும் ஆகவில்லை.
முரளி ஒரு ரிமாண்ட் கைதி ஆவார். அடிதடி வழக்கில் கைதாகி சிறையில்அடைக்கப்படடிருந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல்குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றார் பாலச்சந்திரன்.
சென்னை மத்திய சிறையில் இடிதாக்கி ஒருவர் இறந்த சம்பவம் இதுவரைநடந்திராதது. இச்சம்பவம் குறித்து சிந்தாதிரிப் பேட்டை போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மழை: இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பரவலாக நேற்றுபிற்பகல் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக அடித்து வந்த கடும்வெயிலைத் தணிக்கும் வகையில் இந்த மழை இருந்தது.
சென்னை நகரில் பிற்பகலுக்கு மேல் சென்னை நகர்மற்றும் புறநகர்ப் பகுதிகளில்மழை கொட்டித் தீர்த்தது. இந்த திடீர் மழையால் சென்னை நகரின் பல்வேறுபகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.
தஞ்சையில் தான் அதிகபட்சமாக 115 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரை,ராமநாதபுரம், சிவகாசி, உடன்குடி, குலசேகரன்பட்டனம், கோவில்பட்டி,பாளையங்கோட்டை, கடலூர்,பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திருச்சி,புதுக்கோட்டை,ஈரோடு, காங்கேயம், தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இடிதாக்கியதில் சென்னை மத்திய சிறையில் ஒரு கைதியும், சிவகாசியில்சங்கரம்மாள் என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்ணும்,கடலூர் காரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோதவரி என்ற பெண்ணும் இறந்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications