இங்கிலாந்திடம் ஆயுத உதவி கோரும் ராஜபக்ஷே

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனில் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து ஆயுத உதவிகோரியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. விடுதலைப் புலிகளின்அரண்களை உடைத்து அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் நுழைய ராணுவம் தீவிரமாகமுயற்சித்தும் கூட அந்த முயற்சிகளுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

கிழக்கில், திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் என்ற முக்கிய பகுதியை மீட்க இலங்கை ராணுவம் கடும்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றம் கிடைக்கவில்லை.

விடுதலைப் புலிகள் முன்பை விட இப்போது வலிமையுடன் ராணுவத்துடன் மோதி வருவதால் ஆயுத பலமின்றிஇலங்கை ராணுவம் தவிக்கிறது. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டுக்கு ஆயுத உதவி செய்யப்பட்டுள்ளதாகசெய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனுக்கு ரகசிய பயணம்மேற்கொண்டுள்ளார்.

அங்கு இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேவைர் சந்தித்து பேசியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோருக்குத் தேவைப்படும் ஆயுதங்களை இங்கிலாந்து வழங்க வேண்டும் என்று பிளேரிடம் ராஜபக்ஷேகோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவிடமிருந்து ரேடார் உள்ளிட்ட ராணுவ உதவியை இலங்கை கோரியிருந்தது. ஆனால்தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவியும்வழங்கப்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதனால் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுத உதவியைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இங்கிலாந்திடம் இலங்கை ஆயுத உதவி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

12 புலிகள் படகு மூழ்கடிப்பு?

இதற்கிடையே, காங்கேசன் துறையில் இலங்கை கடற்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்தகடும் சண்டையில் விடுதலைப் புலிகளின் 12 படகுகளை தாக்கி மூழ்கடித்து விட்டதாக கடற்படைதெரிவித்துள்ளது. இந்த சண்டையில் 80 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையேநேற்று கடும் மோதல் வெடித்தது. நேற்று நடந்த கடம் மோதலில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 12 கடற்படகுகளை மூழ்கடித்து விட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மொத்தம் 20 படகுகளில் புலிகள் வந்தனர். அவற்றில்100 புலிகள் இருந்ததாக கருதுகிறோம். இதில் 12 படகுகள் தாக்கி மூழ்கடித்த விட்டோம். இவற்றில் 5 படகுகள்வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலை படை படகுகள் ஆகும்.

இந்த சண்டையில் குறைந்தது 80 விடுதலைப்புலிகள் இறந்திருப்பார்கள் என கருதுகிறோம் என்றார் அவர்.ஆனால் இந்த சம்பவம் குறித்த விடுதலைப் புலிகள் தரப்பு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த சண்டையில் கடற்படையைச் சேர்ந்த 2வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 2 கடற்படை படகுகள்சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஆரம்பித்த இந்த சண்டை இன்று அதிகாலை தான்முடிவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாண தீபகறப்த்தில் உள்ள காங்கேசன் துரை முக்கியமான கடற்படை தளமாகும். யாழ்ப்பாணத்தைநாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து விட்ட விடுதலைப் புலிகள், காங்கேசன் துறையையும் பிறபகுதிகளிலிருந்து துண்டிக்க முயற்சித்து வந்தனர்.

இதற்கிடையே, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களைஎடுத்துட்செல்ல விடாமல் ராணுவம் தடுப்பதாக நிவாரணப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாக். உதவியை தடுக்க வைகோ கோரிக்கை:

இதற்கிடையே சென்னையில் மதிமுக சார்பில் நடந்த பேரணியில, பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ராணுவஉதவி பெறுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கோரியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை இலங்கை ராணுவத்தின் தாக்குதலிருந்துகாப்பாற்றக் கோரியும் மதிமுக சார்பில் நேற்று சென்னையில் பிரமாண்ட பேரணி மற்றும் கூட்டம் நடந்ததது.

சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த கூட்டத்தில் வைகோ பேசுகையில்,பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை பெற ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. இது தமிழ் இனத்தைஅழிக்கும் முயற்சியாகும். எனவே இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், பாகிஸ்தான் இலங்கை விவகாரத்தில் தலையிடுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாகவேமுடியும். இலஙகையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையிலே நடந்த வரும் சண்டை முக்கியமானகட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றுச் சிறப்பான நிலைக்கு வந்துள்ளது.

தடைபட்டுள்ள பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்கச் செய்வது மட்டுமே பிரச்சினையை தீர்க்காது. இறுதித்தீர்வை எட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதே பிரச்சினைக்கு உண்மையான தீர்வை அடையஉதவும்.

விடுதலைப் புலிகளும், தமிழர்களும் வேறு வேறு அல்ல. உண்மையில் ஈழத் தமிழர்களை காத்துக்கொணடிருப்பது விடுதலைப் புலிகள் தான். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஒருதமிழர் கூட அகதியாக தமிழகம் வரவில்லை.

சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர் தேசமும், சிங்கள தேசமும்சேர்ந்தது தான் இலங்கை. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வது என்பது ஈழத் தமிழர்களால் இயலாத காரியம்என்றார் வைகோ.

இந்த பேரணியில் பெரும் திரளான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறனும் பேரணியில் கலந்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+