சென்னை துணை நகரம்: ஜெ.கண்டனம்-சட்டசபையில் அதிமுக அமளி
சென்னை:
சென்னைக்கு அருகே கிராமங்களை அழித்து துணைநகரம் அமைக்கும் முயற்சியைதிமுக அரசு கைவிடாவிட்டால் அதை அதிமுக தடுத்து நிறுத்தும் என்று அக்கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக, மக்கள் விரோதஅலங்கோலங்கள், பாரம்பரியம்மிக்க தமிழகத்தில் தொடர் நிகழ்வுகளாகிக்கொண்டிருக்கினறன என்பதற்கு சென்னையை ஒட்டி அமைக்க இருப்பதாகமைனாரிட்டி திமுக அரசின் முதல்வர் கருணாநிதி அரிவித்திருக்கும் துணை நகரஅறிவிப்பும் ஒரு உதாரணமாகி உள்ளது.ஒரு முதலமைச்சருக்கு தொலை நோக்குப் பார்வை இல்லாத போது இது போன்ற தான்தோன்றித்தனமாக செயல்படுகின்ற நிகழ்வுகள் நெஞ்சை நடுங்க வைக்கும் நசச்செயல்களாக அமைந்து விடுகின்றபோது அதற்கான விலையை கருணாநிதியும்,அவரது கட்சியும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
அதைத்தான் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களாக தாம்பரத்தை அடுத்த 44கிராமங்களில் சந்தித்துக் கொண்டிருக்கிறார். துணைநகர அறிவிப்பைத் தொடர்ந்துஅங்குள்ள அதிமுக அலுவலகங்கள் நொறுக்கப்படும், கொடிக் கம்பங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டும், தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலைக்குத் தென்பகுதியில் பழைய மாமல்லபுரம் சாலைமற்றும் 45 என்.எச். தேசிய நெடுஞ்சாலை இடையே அமைந்துள்ள 1.40 லட்சம் ஏக்கர்பரப்பளவில் 30,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சென்னை துணை நகரம்அமைக்கப்படும் என்பது தான் கருணாநிதியின் அறிவிப்பு.
மேற்படி நிலத்தில் 13,000 பேர் மட்டுமே வசிப்பதாகவும், இந்த நிலப்பகுதியில்,விவசாயம் ஏதும் செய்யப்படாமல் தரிசு நிலங்களாக உள்ளன என்றும் கருணாநிதிகூறியுள்ளார். ஆனால் உண்மை, கருணாநிதி இட்டுக்கட்டிச் சொல்வது போல இல்லை.இந்தப் பகுதியில் ஊரப்பாக்கம், கண்டிகை, ஊனமாஞ்சேரி, அருங்கால்,இல்லலூர்,கொட்ட மேடு, காயிரம்பபேடு, வெண்பேடு, ரத்தினமங்களம், பாண்டூர்,கன்னிவாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட 50 கிராமங்கள்உள்ளன.
இங்கு மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் என்பதுதான் உண்மைநிலவரம். இந்தக் கிராமங்களில், கல்விக் கூடங்கள், பெரிய தொழிற்சாலைகள், சிறியதொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதலானவவைஉள்ளன. மேலும், 100 வருடம் பழமை வாய்ந்த பராம்பரியம் மிக்க மத வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. அத்தனையும் தரைமட்டமாகப் போகின்றன.
இந்த கிராமங்கள் சென்னை மாநகருக்கு மிக அருகில் உள்ளதால் அங்கே அன்னியமற்றும் உள்நாட்டு தகவல் தொடர்பு நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள்ஆகியவை உள்ளன. மேற்படி பகுதி பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிசென்று கொண்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள நிலங்களின் விலையும் மிகுந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது.இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரிய பொருளாதார வளர்ச்சியைஅடையவுள்ளனர்.
சென்னை நகரத்தின் அலங்கோலங்கள் எதுவும் இல்லாமல்,சுத்தமான காற்றுடனும்,சுகாதாரமான சூழ்நிலையிலும் அவர்கள் வசித்து வருகிறார்கள். ஏழைகளுக்கு 2 ஏக்கர்நிலம் தருகிறேன் என்று கூக்குரலிட்டு ஆட்சியைப் படித்தவர், மக்களிடம் இருக்கின்றநிலத்தையும் பிடுங்கி அவர்களை நிலமற்றவர்களாக ஆக்கி, நடுத்தெருவில் நிற்கவைக்கப் போகின்றார்.
அவர் சொல்லியது என்ன, இப்போது செய்து கொண்டிருப்பது என்ன?பாவப்பட்ட கிராம மக்களைப் பாதுகாக்கும் அரணாக அதிமுக இயங்கும், எதையும்சந்திக்கத் தயார் என்று கருணாநிதி சொல்வாரேயானால்ல, அதை சந்திக்க நாங்களும்தயார் என்பது தான் எங்களது பதில்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2 புதிய ஏரிகளை புறநகர்ப்பகுதிகளில் உருவாக்கநினைத்தோம். ஆனால் அந்த ஏரிகள் உருவாக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரமேபோய் விடும் என கிராமக்கள் அச்சம் தெரிவித்ததால், மக்கள் நலன் கருதி அந்தத்திட்டம் கைவிடப்பட்டது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் இந்த அறிக்கை சட்டசபையில் இன்று பெரும்அமளியை ஏற்படுத்தியது. இன்று காலை சபை கூடியதும், ஜெயலலிதாவின் அறிக்கைகுறித்து முதல்வர்கருணாநிதி பிரச்சினை எழுப்பினார். அதில் கூறப்பட்டுள்ள சிலவாசகங்களை படித்துக்காட்டி அதற்கு விளக்கம் அளிக்க முற்பட்டார்.
அப்போது கருணாநிதி கூறிய சில கருத்துக்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அவர்களை அமருமாறு சபாநாயகர் பலமுறைகூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதிமுக உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பேசினர்.
முதஸ்வர் கருணாநிதியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு அதிமுகதுணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரை கோரினார். ஆனால் அதை ஏற்கசபாநாயகர் மறுத்து விட்டதால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications