3 பேர் கொலை: முக்கிய அல் உம்மா தீவிரவாதி கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டதுதொடர்பான வழக்கில் பல வருடமாக தேடப்படடு வந்த முக்கியமான அல் உம்மாதீவிரவாதி சென்னையில் கைது செய்யப்படடுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 1997ம் ஆண்டு இந்துமுன்னணி இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் செல்வக்குமார், பூக்கடை கண்ணன், சங்கர்ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இஸ்லாமிய பெண்களிடம் அவதூறாக பேசியதாலும், பாபர் மசூதி இடிப்பில் கலந்துகொண்டதாலும் இவர்களை அல் உம்மா அமைப்பினர் கொலை செய்ததாக பரபரப்புஏற்பட்டது. இந்த படுகொலைகள் தொடர்பாக மேலபாளையம் போலீஸார் 16 பேர்மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்களில் 13 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டடுவிட்டனர்.

இவர்களில் 7 பேர் அல் உம்மா அமைப்பினர். இவர்களைத் தவிர மற்ற 6 பேரும்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து 3 பேர் தலைமறைவாக இருந்துவந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.தலைமறைவாக இருந்து வந்த மைதீன் என்பவர் கடந்த ஆண்டு ஆத்தங்கரைபகுதியில் பிடிபட்டார்.

ரசூல் மைதீன், அபுதாஹீர் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் ரசூல் மைதீன் பதுங்கியிருப்பதாகவும்,அவருக்கு கல்யாணம் நடக்கவுள்ளதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது. மாறுவேடத்தில் சென்ற போலீஸார்ரசூல் மைதீனுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த கல்யாண மண்டபத்தை சுற்றிவளைத்தனர்.

அப்போது, ரசூல், மணமகள் ரிபாவை மணம் முடித்து விட்டார். திடீரென உள்ளேபுகுந்த போலீஸார் ரசூலை மடக்கி கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. கைது செய்யப்பட்ட மைதீனை பலத்த பாதுகாப்புடன் போலீஸார்அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இன்று காலை நெல்லை கொண்டு போகப்பட்ட மைதீன் அங்குள்ள நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலப்பாளையம் கொலைக்குப் பின்னர் பெங்களூருக்குத் தப்பிச் சென்ற மைதீன்அங்கிருந்து மும்பைக்கு சென்றார். பின்னர் துபாய் சென்ற மைதீன் அங்கு 7ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.

திருமண ஏற்பாட்டையடுத்து சென்னைக்கு திரும்பியுள்ளார். திருமணத்தைமேலப்பாளையத்தில் நடத்தினால் போலீஸாரிடம் சிக்க நேரிடும் என்பதால் பல்வேறுஇடங்களை தேர்வு செய்து வைத்து கடைசியாக சூளைமேட்டில் வைத்து கல்யாணம்செய்ய முடிவுசெய்தனர்.

திருமணத்திற்குப் பின்னர் துபாய்க்கு செல்ல மைதீன் திட்டமிட்டிருந்தார். இதற்காகவிமான டிக்கெட்டையும் முன்கூட்டியே எடுத்திருந்தார். மனைவியையும் உடன்அழைத்து செல்ல திட்டமிட்டிருந்த மைதீன் இப்போது போலீஸ் வசம் சிக்கி விட்டார்.கடந்த 9 ஆண்டுகளாக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த மைதீன் மாப்பிள்ளைகோலத்தில் கைது செய்யப்பட்டது சூளைமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+