மாநில முதல்வர்களுடன் பிரதமர் 5ம் தேதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உள்நாட்டு பாதுகாப்பு, நக்சலைட் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துமாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் 5ம் தேதி டெல்லியில் ஆலோசனைநடத்துகிறார்.நக்சலைட் விவகாரம், பயங்கரவாதம், பேரிடர் நிர்வாகம், காவல்துறை நிர்வாகம்,வகுப்பு வாத பிரச்சினைகள் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பானவிவகாரங்கள் குறித்து முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன் சிங்முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து 5ம் தேதி டெல்லியில் 13 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனைகூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications