நாளை சந்திர கிரகணம்-22ல் சூரிய கிரகணம்!
டெல்லி:
நாளை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
ஒரே மாதத்தில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகியவை ஏற்படும் அதிசயம்இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில உள்ள பி.எம்.பிர்லாஅறிவியல் மைய இயக்குனர் சித்தார்த் கூறுகையில்,நாளை (செப்டம்பர் 7) நள்ளிரவு 12.35 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பிக்கும். 8ம்தேதி அதிகாலை 1.08 மணி வரைக்கும் இது நீடிக்கும். இந்த கிரகணத்தை நாடுமுழுவதும் தெளிவாக காண முடியும்.
அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய கண்டங்களில் சிலபகுதிகளில் இதை காண முடியும்.
ஆனால், வட அமெரிக்காவில் முற்றிலும் இந்த கிரகணத்தை காண முடியாது.
அப்போது அவர்களுக்கு பகல் நேரம் என்பதால் இதை காணும் பாக்கியம்அவர்களுக்கு கிடைக்காது. ஈராக், ஆப்கானிஸதான் ஆகிய நாடுகளில் முழு சந்திரகிரகணத்தையும் காண முடியும். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு மார்ச் 3ம்தேதி ஏற்படும்.
இதேபோல வரும் 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் இதை இந்தியாவில்காண முடியாது. ஒரே மாதத்தில் சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் ஏற்படுவதுமிகவும் அரிது என்றார் சித்தார்த்.
நாளை திருப்பதி கோவில் மூடல்:
சந்திர கிரகணத்தையொட்டி நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாலையில் மூடப்படுகிறது.
மாலை 6.30 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 1.30 மணி வரை கோவில் மூடப்படும்.. சந்திரகிரணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்யும் பணிநடைபெறும். அதன் பிறகு புண்ணிய வசன நிகழ்ச்சி நடைபெறும்.
இதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை அபிஷேகம், நிஜவாத தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 8ம் தேதி காலை 9மணிமுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications