அன்னை தெரசாவின் 10ம் ஆண்டு நினைவு தினம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

அன்னை தெரசாவின் 10 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

Mother Theresa

அன்னை தெரசா கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி காலமானார்.

கொல்கத்தாவில்உள்ள அன்னை தெரசா வாழ்ந்த இல்லத்தில், ஏராளமானோர்மெழுகுவர்த்தி ஏற்றி அன்னையை நினைவு கூர்ந்தனர். தெரசா நிறுவிய மிஷனரீஸ்ஆப் சாரிட்டிஸ் அமைப்பின் தலைவரான சகோதரி நிர்மலா தலைமையில் சிறப்புஅஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தது.

அன்னைக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் சகோதரி நிர்மலா பேசுகையில்,

1910ம் ஆண்டு கொசோவா நகரில் பிறந்தவர் அன்னை தெரசா. ஏக்னஸ்பொஜக்ஸியூ என்பது அவரது இயற்பெயர். இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழைகள்இருப்பதையும், வறுமை தாண்டவமாடுவதையும் அறிந்து இந்தியாவுக்கு வந்துசேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

18 வயதிலேயே இந்தியாவுக்கு வந்தவர் தனது பெயரை தெரசா என்று மாற்றிக்கொண்டார். அன்று முதல் இந்தியாவில் தனது அன்புச் சேவையை தொடங்கினார்.உலகம் முழுவதிலும் உள்ள சேவையாளர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகதிகழ்கிறார் தெரசா என்று புகழாரம் சூட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+