நாளை சந்திர கிரகணம்-22ல் சூரிய கிரகணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாளை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

ஒரே மாதத்தில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகியவை ஏற்படும் அதிசயம்இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில உள்ள பி.எம்.பிர்லாஅறிவியல் மைய இயக்குனர் சித்தார்த் கூறுகையில்,

நாளை (செப்டம்பர் 7) நள்ளிரவு 12.35 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பிக்கும். 8ம்தேதி அதிகாலை 1.08 மணி வரைக்கும் இது நீடிக்கும். இந்த கிரகணத்தை நாடுமுழுவதும் தெளிவாக காண முடியும்.

அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய கண்டங்களில் சிலபகுதிகளில் இதை காண முடியும்.

ஆனால், வட அமெரிக்காவில் முற்றிலும் இந்த கிரகணத்தை காண முடியாது.

அப்போது அவர்களுக்கு பகல் நேரம் என்பதால் இதை காணும் பாக்கியம்அவர்களுக்கு கிடைக்காது. ஈராக், ஆப்கானிஸதான் ஆகிய நாடுகளில் முழு சந்திரகிரகணத்தையும் காண முடியும். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு மார்ச் 3ம்தேதி ஏற்படும்.

இதேபோல வரும் 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் இதை இந்தியாவில்காண முடியாது. ஒரே மாதத்தில் சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் ஏற்படுவதுமிகவும் அரிது என்றார் சித்தார்த்.

நாளை திருப்பதி கோவில் மூடல்:

சந்திர கிரகணத்தையொட்டி நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாலையில் மூடப்படுகிறது.

மாலை 6.30 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 1.30 மணி வரை கோவில் மூடப்படும்.. சந்திரகிரணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்யும் பணிநடைபெறும். அதன் பிறகு புண்ணிய வசன நிகழ்ச்சி நடைபெறும்.

இதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை அபிஷேகம், நிஜவாத தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 8ம் தேதி காலை 9மணிமுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+