தபால்துறையால் ஐஐடி வாய்ப்பை இழந்த மாணவர்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

தபால்துறையின் மெத்தனத்தால், ஐஐடியில்சேரும் அரிய வாய்ப்பை இழந்து நிற்கிறார்ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்.

ஒரிஸ்ஸா மாநிலம் மயூர்பாஞ்ச் மாவட்டத்த்ை சேர்ந்த பஹதலா கிராமத்தைச்சேர்ந்தவர் பலராம் டுடு. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இந்த 19 வயது மாணவர்,காரக்பூர் ஐஐடி நடத்திய நுழைவுத் தேர்வில் 83வது ரேங்க் பெற்றார்.

இந்த அளவுக்கு சிறப்பான தேர்ச்சியைப் பெற்றிருந்தும் கூட பலராமால் ஐஐடியில்சேர முடியாமல் போய் விட்டது. இதற்கு காரணம் தபால்துறையின் மெத்தனபோக்குதான்.

ஜூன் 21ம் தேதி கவுன்சிலிங் வைத்திருந்தது காரக்பூர் ஐஐடி. இதுதொடர்பான தகவல்தபால்மூலம் பலராமுக்கும் ஜூன் 6ம் தேதிய அனுப்பப்பட்டிருந்தது. ஆனால்தபால்துறையின் மெத்தனம் காரணமாக உரிய நேரத்தில் அந்தக் கடிதம் பலராமுக்குகிடைக்காமல் போய் விட்டது. இதனால் ஐஐடி கவுன்சிலிங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து பலராம் கூறுகையில், பிஜஜேபி நகர் தபால் நிலையத்திலிருந்து விரைவுதபால் மூலம் அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்தக் கடிதம்எனக்கு வந்து சேரவில்லை. என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தபால்துறை காரணம் கூறுகிறது.

எனது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாவிடடாலும் கூட எனது நண்பர்களிடத்திலோஅல்லது எனது பெற்றோர் வேலை பார்க்கும் முதலாளியிடமோ இதைதெரிவித்திருக்கலாம். இன்டர்நெட்டில் கவுன்சிலிங் குறித்து பார்க்காமல் விட்டதுஎனது தவறு. அதைச் செய்திருந்தால் இந்த இழப்பைநான் தவிர்த்திருக்க முடியும்.

ஆனால் என்னைப் போன்ற ஏழை மாணவரால் எங்கே போய் இன்டர்நெட்டைப்பார்க்க முடியும். அதற்கான வசதி என்னிடம இல்லை. தபால்துறையின சேவையைமட்டுமே நாங்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது என்கிறார் வேதனையுடன்.

தனது நிலையை உணர்ந்து ஐஐடி நிர்வாகம் மனது வைக்க வேண்டும் என்றுகோருகிறார் பலராம. அதேசமயம் தவறு செய்த தபால் துறை அதிகாரிகள் கடுமையாகதண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விரும்புகிறார்.

நாடு முழுக்கவே இதுபோல தபால் துறையில் பல தவறுகள் நடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+