அஸ்ஸாம் பூகம்பம்: டைம் கொடுக்கும் நிபுணர்
சென்னை:
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு பயங்கர பூகம்பம்தாக்கும் என்று நான் கூறியது யூகம் அல்ல. செப்டம்பர் 11ம் தேதி வரை பூகம்பஆபத்து இருக்கிறது என செனனை புவியியல் நிபுணர் வேங்கடநாதன் மீண்டும்திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக பயன்பாட்டு புவியியல் துறையில் ஆய்வாளராக உள்ளஇவர், வெள்ளிக்கிழமை சந்திரன், சூரியன், புதன் ஆகிய மூன்று கோளகளும் ஒரேநேர்கோட்டில வருவதால் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.21மணிக்கு பெரும் பூகம்பம் ஏற்படும் என்றார்.இந்த பூகம்பம் மிகப் பெரிதாக இருக்கும் எனவும், 7 முதல் 8 ரிக்டர் அளவுக்குஇருக்கக் கூடும் எனவம் கூறியிருந்தார். இதனால் அஸ்ஸாமில் நேற்று முன்தினம்மாலை முதலே பெரும் பீதி ஏற்பட்டது. மக்கள் பெரும் பதட்டமடைந்தனர். பலர்அஸ்ஸாமை விடடு வெளியேறி அண்டை மாநிலங்களில் உள்ள உறவினர்கள்வீடுகளுக்குச் சென்றனர். மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைஎடுத்திருந்தது.
நேற்று காலை முதலே அஸ்ஸாம் மக்களிடையே திக் திக் என உணர்வு நிலவியது.அடுக்கு மாடிக் குடியிருப்பிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறிசாலைகளிலும், தெருக்களிலும் கூடியிருந்தனர். ஆனால் 8.21 மணிக்கும் பூகம்பம்வரவில்லை. இதன் பின்னரும் வரவில்லை.
இதையடுத்து வேங்கடநாதனை திட்டியபடி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பினர்.
ஆனால் வேங்கடநாதன் தனது அடுத்த குண்டை வீசியுள்ளார்.
பூகம்பம் வராதது ஏன், கணிப்பு பொய்த்தது ஏன் என்று கேட்டு வேங்கடநாதனுக்குநூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாம். நேற்று காலை முதல்அவரது செல்போன ஒலித்துக் கொண்டே இருக்கிறதாம். அந்த அளவுக்கு போன்போட்டு கேள்விகளால் துளைதது விட்டார்களாம்.
தனது கணிப்பு குறித்து வேங்கடநாதன் கூறுகையில், நிச்சயம் இது யூகமான தகவல்அல்ல. கிட்டத்தட்ட 19 நாட்கள் நான் பல்வேறு ஆய்வுகள் செய்துதான் இந்தகணிப்பை வெளியிட்டேன். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்தான் இதைபெரிதுபடுத்தி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டன.
உண்மையில் எனது கணிப்புகளை அறிவியல் வட்டாரத்தில் மட்டுமேஅனுப்பியிருந்தேன். இதை பொது எச்சரிக்கையாக வெளியிட கூடாது என்றும்கோரியிருந்தேன். அஸ்ஸாம் மாநில இயற்கை பேரழிவு நிர்வாகப் பிரிவுக்கு நான்அனுப்பிய கடிதத்திலும் கூட, இதை பொது எச்சரிக்கையாக வெளியிட்டு மக்களைபீதிக்குள்ளாக்க வேண்டாம் என்று கோரியிருந்தேன்.
ஆனால் அஸ்ஸாம் அழிந்து போகப் போகிறது என்ற ரீதியில் நான் எச்சரித்திருப்பதாகசெய்திகள் வெளியாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்திவிட்டது.
எனது கணிப்பை இன்னும் கூட புறம் தள்ளி விட முடியாது. நான் எனது கணிப்பில்கூறியிருந்தது எனனவென்றால் செப்டம்பர் 8ம் தேதிக்கு 3 நாட்கள் முன்பாகாவோஅல்லது 3 நாட்கள் பின்பாகவோ பூகம்பம் தாக்கும் என்றுதான் கூறியிருந்தேன்.
எனவே செப்டம்பர் 11ம் தேதி வரைக்கும் பூகம்பத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.அதுவரை பொறுத்திருங்கள். செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகு பூகம்பம்வராவிட்டால் எனது கணிப்பு தோல்வியுற்றதாக நான் அறிவிப்பேன்.
அஸ்ஸாம் மாநிலத்தில் 7 முதல் 8 ரிக்டர் அளவிலான பூகம்பம் வரக்கூடியவாய்ப்புகள் உள்ளதாக இப்போதும் கூட நான் திட்டவட்டமாக தெவிக்கிறேன்என்கிறார் வேங்கடநாதன்.
செப்டம்பர் 11 வரை வேங்கடநாதன் டைம் கொடுத்திருப்பதால் அஸ்ஸாமில்பூகம்பம் வருகிறதோ இல்லையோ, மக்கள் மனதில் பீதி அவ்வளவு சீக்கிரம் விலகாதுஎன்பது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications