கடலில் வீசப்பட்ட மீனவர்கள்: இலங்கை கடற்படை வெறிச்செயல்!
நாகப்பட்டனம்:
நாகை மாவட்ட மீனவர்கள் 2 பேரை இலங்கை கடற்படை கடலில் தூக்கி வீசியது. அவரகள் கதி என்ன என்பதுதெரியவில்லை.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்குச்சொந்தமான படகில், அவரது தந்தை சபாபதி, பாலு, ராஜாங்கம், செல்வமணி ஆகிய மீனவர்கள் கடந்த 7ம் தேதிகாலை மீன் பிடிக்க சென்றனர்.கோடியக்கரைக்கு கிழக்கே நடுக் கடலில் அவர்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர். அங்கு செந்தூர் கிராமத்தைச்சேர்ந்த 50 மீனவர்கள் ஏற்கனவே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
மறுநாளும் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாலையில் ஒரு சிறிய கப்பல் அங்கு வந்தது.இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் மீன் பிடித்துக் கெண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளில் இறங்கிமீன்களை பறித்தனர். பினனர் நான்கு மீனவர்களை கடலில் குதிக்குமாறு உத்தரவிட்டனர்.
அதற்கு தமிழக மீனவரக்ள், மீன்களை வேண்டுமானால் எடுததுக் கொள்ளுங்கள், எங்களை விட்டு விடுங்கள்என்று கெஞ்சினர். ஆனால் ஈவு இரக்கமில்லாத அந்த காட்டு மிராண்டி வீரர்கள், நான்கு பேரையும் தூக்கி கடலில்வீசினர்.
இதில் சக்திவேல், செல்வமணி ஆகியோர் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் நீந்தி கரை சேர்ந்தனர்.வயதான சபாபதி, பாலு ஆகியோர் கரைக்கு வரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.இருவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கடலில் வீசப்பட்ட பாலுவுக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. அவரது மனைவி சித்ராகர்ப்பிணியாக உள்ளார். கடலில் மூழ்கிய கணவரை நினைத்து அவர் கதறி அழுதது செந்தூர் கிராமத்தையேபெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications