• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிமுக செயற்குழுவை புறக்கணித்த எம்எல்ஏ:அரசு விழாவில் பங்கேற்று ஸ்டாலினுக்கு ஜால்ரா

By Staff
|

மதுரை:

அதிமுக செயற்குழுக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு உள்ளாட்சித்துறை நடத்தியவிழாவில் அமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்றார் மதுரை மேற்கு தொகுதி அதிமுகஎம்எல்ஏவான எஸ்.வி. சண்முகம்.

இருண்டு கிடக்கும் தமிழகத்தை பிரகாசிக்கச் செய்ய தளபதி ஸ்டாலின்தான் வழி காட்டவேண்டும் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ள எம்.எல்.ஏ. சண்முகம்விரைவில் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவுக்குத் தாவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் கால்வாய்கள் சீரமைப்பு திட்ட விழா நேற்று நடந்தது. அதே நேரத்தில்சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டமும் நடந்தது. அதில் அதிமுக எம்பி,எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், அதிமுக செயற்குழுக் கூட்டத்தை புறக்கணித்த சண்முகம், உள்ளாட்சித் துறைஅமைச்சர்ஸ்டாலின் கலந்து கொண்ட மதுரை விழாவில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார் சண்முகம். அவர்பேசுகையில்,

மதுரையில் பெரும் மழை பெய்யும்போதெல்லாம் செல்லூர் பகுதி வெள்ளத்தில்மூழ்கிவிடுகிறது. இந்தத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதியுறும்நிலை ஏற்படுகிறது. இப்போது இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க கால்வாய்சீரமைப்பு திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கித் தந்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

அவர் அரசியல் நாகரீகம் தெரிந்தவர். பண்பாளர். அவரை நான் நேசிக்கிறேன்.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில், குழாயடிச்சண்டை போன்றுநிகழ்வுகள் இருந்தபோதும், சாந்த முகத்துடன், புன்னகை ததும்ப அமைதியுடன்அமர்ந்திருந்தார் ஸ்டாலின்.

இது அவரது அரசியல் பண்பாட்டை காட்டுகிறது. ஸ்டாலினின் அரசியல் பக்குவம்எனனைக் கவர்ந்தது. உண்மையைச் சொல்லாமல் இருப்பது நாகரீகம் அல்ல.அதனால்தான் சொல்கிறேன்.

இருண்ட காடாக உள்ள தமிழகத்தை பிரகாசிக்க வைக்க வேண்டிய பொறுப்புதளபதிக்கு உண்டு. தமிழகததில் மிகப் பெரிய சக்தி, திராவிட இயக்கம். இன்றுதிராவிட இயக்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சின்னாபின்னமாகின்றன. மாற்றுசக்திகள் தலை தூக்குகின்றன.

இந் நிலையில், திராவிடக் கட்சிகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்பவராகநீங்கள் இருக்க வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன்உங்களது அணுகுமுறைமென்மையாக இருக்கவேண்டும் என்றார் சண்முகம்.

சண்முத்தின் இந்த டச்சிங் பேச்சு கூட்டத்தில் பெரும் ஆச்சரிய அலைகளைஏற்படுத்தியது.

பின்னர் பேசிய ஸ்டாலின், மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணம் இருக்கும்என்ற திராவிட உணரவுடன், கருத்துககளை எடுத்துறைத்தார் சண்முகம்.

கருணாநிதி தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார். நன்றி தெரிவித்துள்ளார்.எதற்கும் அச்சப்படாமல் தனது நன்றி உணர்வைக் காட்டியவருக்கு நன்றி. நல்லதைவரவேற்கும் பாங்கு அவரிடம் உள்ளது. எல்லோரிடமும் அது வரவேண்டும் என்றார்ஸ்டாலின்.

சண்முகத்தின் இந்த செயல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சண்கத்திற்கு எந்த ரூபத்தில் ஆப்பு வரும் என்பது குறித்துமதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜெவுக்கு விசுவாசமாக இருப்பேன்: சண்முகம்

இதற்கிடையே சண்முகம் அளித்துள்ள பேட்டியில்,

மதுரை மேற்கு தொகுதியில் நீண்ட காலமாக தீராக கால்வாய் பிரச்சனையை தீர்த்து வைக்க ஸ்டாலின் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்தத் தொகுதியின் வெள்ளச் சேதத்தை தவிர்க்க முதலில் ரூ. 7 கோடி ஒதுக்கினார்கள். இப்போது அதை ரூ. 12 கோடியாக உயர்த்தியுள்ளார் ஸ்டாலின்.

இதனால் தொகுதிக்குள் என்னை தலை நிமிர்ந்து நடக்கச் செய்துள்ளார். இதனால் அவரை பாராட்டினேன். அதற்காக நான் திமுகவில் சேர வேண்டியஅவசியமில்லை.

சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்துக்கு எனக்கு மட்டுமல்ல, எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் அழைப்பு வரவில்லை. அழைப்புஇல்லாததால் நான் கலந்து கொள்ளவில்லை (பிற எம்எல்ஏக்கள் பங்ககேற்றது குறிப்பிடத்தக்கது)

ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் திமுகவில் சேர வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் தொகுதி மக்களுக்காக எம்எல்ஏ என்ற முறையில் திமுகஅமைச்சர்களையும் ஸ்டாலினையும் சந்திக்க தயங்க மாட்டேன்.

அவர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றினால் இத் தொகுதியை நிரந்தரமான அதிமுக தொகுதியாக மாற்ற முடியும். திமுகவில் சேர்ந்தால்கட்சித் தாவல் சட்டப்படி எம்எல்ஏ பதவி போய் விடும். நான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாகவே இருப்பேன். அதிமுகவைவிட்டு விலக மாட்டேன்.

அதே நேரத்தில் என் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறேன் என்றார்.

தானாக விலகினால் பதவி காலியாகிடும் என்பதால், அதிமுகவுக்கு நெருக்கடி தந்து தன்னை கட்சியே வெளியேற்ற வேண்டும் என்று சண்முகம்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X