இலவச டிவிக்கு காசு வாங்கும் திமுக-விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:

கட்சிகளின் தனிப்பட்ட பலத்தை தெரிந்து கொள்ள மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சிதேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்காந்த்கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு கட்சியினர் தேமுதிகவில் இணையும் விழா நடந்தது. இதில்விஜய்காந்த் பேசியதாவது,

நமது வளர்ச்சியை கண்டு அனைத்து கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்படும் தொல்லைகளைகண்டு இளைஞர்கள் பயப்படக் கூடாது. நம் கட்சியில் இளைஞர்கள் அதிகம் இருப்பது மற்ற கட்சிகளுக்குவருத்தமாக இருக்கிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரி கூட்டணி அமைத்துக் கொள்ளையடிக்கின்றனர்.

கிராமங்களில் குடிநீர் இல்லை, ஏழ்மை குறையவில்லை. பிராந்தி கடைகள் வரை ஊழல் நடக்கிறது. என்னிடம் 5ஆண்டுகள் ஆட்சியை கொடுங்கள் லஞ்ச, ஊழலற்ற ஆட்சியை நடத்தி காட்டுகிறேன். சரிவர ஆட்சிநடத்தாவிட்டால் தூக்கி எறியுங்கள். ஆட்சி அதிகாரம் திமுக, அதிமுகவுக்கு மட்டும் பட்டா போட்டுகொடுக்கவில்லை.

திறமையான ஆட்சியை, இதுவரை நீங்கள் பார்த்திராத சிறந்த ஆட்சியை நான் தருவேறன்.

கவர்ச்சி திட்டங்களை மக்கள் எதிர்க்க வேண்டும், எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தனி மனித வருமானத்தைஉயர்த்தி காட்டுவேன். சமத்துவபுரங்களில் டெலிவிஷன் வழங்க ரூ.225, கேபிள் இணைப்புக்கு ரூ.125 எனவசூலிக்கப்பட்டுள்ளது.

நான் ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். அதனால் தான் நான் சார்ந்த ஜாதி மக்கள் இல்லாததொகுதியில் போட்டியிட்டேன். கட்சிகளின் தனிப்பட்ட பலம் தெரியவேண்டும் என்று மதுரை மத்திய தொகுதிஇடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்.

தமிழகத்தில் கள்ளுக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும். அதனால் ஏழை, எளிய மக்கள் பலனடைவார்கள். மதுக்கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு இத்தனை பெர்சன்ட் என கமிஷன் கிடைப்பதால்தான் கள்ளுக் கடைகளை திறக்கஅரசுகள் மறுக்கின்றன. நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக கள்ளுக் கடைகளை திறப்பேன் என்றார் விஜயகாந்த்.

இவ்வாறு அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய விஜய்காந்த், இங்கே எதிர்க்கட்சியினர் சலசலப்பை ஏற்படுத்த முயல்கிறார்கள். நமது கட்சியினர்கட்டுப்பாட்டோடு இருந்து அதை முறியடிக்க வேண்டும் என்றார். இதையடுத்து சலசலப்பு ஏற்படுத்தியவர்களை (இவர்களும்தேமுதிகவினர் தான்) தேமுதிகவினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+