தாய்லாந்தில் ராணுவ புரட்சி-ஆட்சி கவிழ்ப்பு
பாங்காக்:
தாய்லாந்து பிரதமர் தக்சின் சினவத்ரா ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காசென்றுள்ள நிலையில் ராணுவ கமாண்டரான சோந்தி பூன்யரத்கிலின் அந் நாட்டில்ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.சோந்திதான் பிரதமர் என்றும் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகலைக்கப்பட்டு விட்டதாகவும் ராணுவ தலைமை தெரிவித்துள்ளது. அங்கு ராணுவசட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான அரசு கட்டடங்களை ராணுவத்தினர்உதவியோடு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார் சோந்தி.
![]() |
சோந்தி பூன்யரத்கிலினை, பதவி நீக்கம் செய்ய பிரதமர் தக்சின் திட்டமிட்டிருந்ததைஅறிந்து கொண்டு இந்த புரட்சியை நடத்தியுள்ளார் சோந்தி.
இதையடுத்து பாங்காக் நகர வீதிகளில் ராணுவ டாங்குகள் அணிவகுத்து செல்கின்றன.தலைநகரில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பு ராணுவம்குவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு டிவி, ரேடியோ நிலையங்களையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில்கொண்டு வந்துள்ளது.
![]() |
அதே நேரத்தில் இந்த ராணுவ புரட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில்எதிர்ப்பில்லை. அவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.
ஆட்சி இப்போது யார் வசம் உள்ளது என்பதே தெரியவில்லை. நாடடில் என்னநடக்கிறது என்றே புரியாத மிகக் குழப்பமான சூழல் நிலவுகிறது.
சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு கூட தாங்கள் ஏன் அங்குஎதற்காக நிற்கிறோம் என்று தெரியவில்லை. அதே போல ராணுவ அதிகாரிகளில்எத்தனை பேர் புரட்சியாளர் சோந்திக்கு ஆதரவாக உள்ளனர் என்றும் தெரியவில்லை.
இந் நிலையில் சோந்தியும், கடற்படை மற்றும் விமான படை கமாண்டர்கள்தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேதேஜ்ஜை சந்தித்து பேசினர். அவர்கள்மன்னருக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ராணுவப் புரட்சியையே மன்னர்தான் நடத்தினாரோ என்ற சந்தேகமும்எழுந்துள்ளது.
ஆனால் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தக்சின்தான் இப்போதும்பிரதமர் என்றும், நாடு அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும்தெரிவித்துள்ளது.
மேலும் ராணுவத்தினர் யாரும் சட்ட விரோதமாக செயல்படக் கூடாது என்றும் அந்தஅறிக்கையில் தக்சின் கூறியுள்ளார்.
இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் தக்சின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் அந்த தேர்தல் முறைகேடுகளுடன் நடந்தது. இதனால் அவருக்கு மக்கள்மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது.
மேலும் கடந்த சில மாதங்களாகவே தாய்லாந்தில் ராணுவ புரட்சி நடக்கப் போவதாகஅரசியல்பார்வையாளர்கள் கூறி வந்தனர்.
இப்போது ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்திருக்கும் ராணுவ கமாண்டரானசோந்தி ஒரு முஸ்லீம் ஆவார். இந் நாடு புத்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் சிறுபான்மையாக உள்ள முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியைபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான முஸ்லிம்கள் தெற்கு தாய்லாந்தில் தான் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசுக்கு எதிராக கலகம் நடந்து வந்ததால் அவர்களை சமாதானப்படுத்தவேசோந்தியை ராணுவ கமாண்டராக்கினார் பிரதமர் தக்சின்.
ஆனால், இப்போது தக்சினை கவிழ்த்துவிட்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைபிடித்துள்ளார் சோந்தி.
இதற்கிடையே இப்போது அமெரிக்காவில் இருக்கும் தாய்லாந்து பிரதமர் தக்சின்நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளதோடு ராணுவ கமாண்டர்சோந்தியை பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
சட்ட விதிகளை மீற வேண்டாம் என ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஐ.நா. பயணத்தை அவசரமாக முடித்து கொண்டு அவர் பாங்காக் திரும்புகிறார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:
இதற்கிடையே தாய்லாந்தில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அந் நாட்டுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள் அவரசமாக தாய்லாந்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications