தலைவர் பதவியை ஏலம் விட்ட கிராமம்!
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஐய்யனார் குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஊர்ப் பெரியவர்கள்தலைவர் பதவியை ஏலம் விட்டனர். தகவல் அறிந்து வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அந்தஏலத்தைத் தடுத்து நிறுத்தினர்.
அக்டோபர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மதுரை அருகே ஒரு ஊராட்சியில், ஊராட்சித் தலைவர்பதவியை ஏலம் விட முயற்சி நடந்துள்ளது.மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள ஐய்யனார் குளம் கிராமத்தில் தான் இந்த ஏலம் நடந்தது. தலைவர் பதவிக்குப்போட்டியிட விரும்புவோர் ஊர் பஞ்சாயத்துக்கு ரூ. 12 லட்சம் தந்தால் அப்பதவி அவருக்கே ஒதுக்கப்படும் எனஊர்ப் பெரியவர்கள் அறிவித்தனர்.
இதுதொடர்பாக நேற்று கிராமத்தில் ஊர்க் கூட்டம் கூட்டப்பட்டு ஏலம் நடந்தது. இக்கிராமத்தில் பிறமலைக் கள்ளர்வகுப்பினர் தான் அதிகம் உள்ளனர். இந்த ஊராட்சியின் கீழ் ஏ.ஆண்டிப்பட்டி, ஐய்யனார் குளம், கொண்டப்பட்டி,அழகாபுரி, குளிர்ந்த நகர் உள்ளிட்டி கிராமங்கள் வருகின்றன.
கடந்த தேர்தலின் போதும் ரூ.5 லட்சத்துக்கு தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இந்த முறை 12 லட்சத்துக்குதலைவர் பதவியை ஏலம் விட்டனர். ஆனால் தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்து வந்து ஏலத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுபோல ஏலம் விடுவது சட்டவிரோதம், அனைவரையும் கைது செய்ய நேரிடும் என அதிகாரிகள் கிராமமக்களை எச்சரித்தனர். ஆனால் கிராம மக்கள், நாங்கள் ஊர்த் திருவிழா குறித்துப் பேசத்தான் இங்கேகூடியுள்ளோம் என்று கூறினர். ஆனால் தலைவர் பதவியை ஏலம் விடும் நிகழ்ச்சிதான் நடக்கிறது என ஊர் மக்கள்சிலர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊர் மக்களை கலைந்து போகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பின்னர் ஏலத்தைகைவிட்டு விட்டு ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.
பாப்பாபட்டி, நாட்டாமங்கலத்தில் மனு தாக்கல்:
இதற்கிடையே சர்ச்சைக்குரிய பாப்பாபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய கிராமப் பஞ்சாயத்துக்களில் தலா ஒருவர்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
முக்குலத்தோர் வகுப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி,நாட்டமாங்கலம் ஆகிய பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவி கடந்த பல ஆண்டுகளாக காலியாகவே கிடக்கிறது.
இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஊராட்சித் தேர்தலில் போட்டியிட பாப்பாபட்டி, நாட்டாமங்கலம்ஆகிய பஞசாயத்துக்களில் தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாலுச்சாமி என்பவர் பாப்பாபட்டியிலும், பவுன்ராஜ் என்பவர் நாட்டாமங்கலத்திலும் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார். இதையடுத்து இரு வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரு பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட கிராமங்களிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications