பத்மினியின் கடைசி ஆசை!
சென்னை:
நாட்டிய போரொளி நடிகை பத்மினி உடலுக்கு கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மேலும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்கள். அவரது உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின்சாரமயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
பழம்பெரும் நடிகை பத்மினி நேற்று முன் தினம் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று மாலைவேளச்சேரியில் உள்ள சகோதர் மகள் ஷோபனா வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.பத்மினியில் மகன் பிரேம் ஆனந்த் அமெரிக்காவில் இருந்து இன்று அதிகாலை வேளச்சேரி வந்தார். அவர் தனதுதாயரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவரை உறவினர்கள் தேற்றினார்கள்.
முதல்வர் அஞ்சலி:
முதல்வர் கருணாநிதி நேரில் சென்று பத்மினி உடலுக்கு மலர் வளையம் வைத்து சிறிது நேரம் மெளன அஞ்சலிசெலுத்தினார். பின்னர் பத்தமினியின் மகன் பிரேம் ஆனந்துக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர், நடிகைகள் அஞ்சலி:
நடிகர்கள் நாகேஷ், சத்யாராஜ், சிவகுமார், ராதாரவி, ராஜேஷ், விவேக், எஸ்வி.சேகர், நடிகைகள் குஷ்பு,சுஹாசினி, மனோரமா, சீமா, எஸ்என்.லட்சுமி, ராதிகா மற்றும் பட அதிபர்கள் முக்தா சீனிவாசம் ஏவிஎம்.சரவணன்ஆகியோர் பத்மனியில் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜெயலலிதா இரங்கல்:
பத்மினி இயற்கை எய்தியாது திரைப்படத்துறைக்கு மட்டுமல்லாமல், நாட்டியத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பு.இது ஈடு செய்ய முடியாதது என ஜெயலலிதா இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.
கடைசி ஆசை நிறைவேறியது:
நான் இறந்த பிறகு நடிகர் சிவக்குமார் வரைந்த என் படத்தை என் உடல் அருகே வைக்க வேண்டும் என்றுபத்மினி கூறிய கடைசி ஆசையை அவரது சகோதரர் மகளான நடிகை ஷோபனா நிறைவேற்றினார்.
பொன்னு விளையும் பூமி என்ற படத்தில் பத்மினி நடித்துக் கொண்டிருந்தபோது, அப்போது தான் சினிமாவில்அறிமுகமான சிவக்குமார் பத்மினியின் ஓவியத்தை வரைந்தார். அதை தன் வீட்டிலேயே வைத்திருந்தார்.
இந் நிலையில் கடந்த ஆண்டு தனது உறவினரான நடிகர் வினீத்தின் திருமணத்தில் பங்கேற்க வந்த சிவக்குமாரைபத்மினி சந்தித்தார். அப்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தான் வரைந்த படத்தை பத்மினியிடம் தந்தார்சிவக்குமார். அதை மிகவும் ரசித்த பத்மினி அதை எப்போதும் தன்னுடனே வைத்திருந்தார்.
நான் இறந்தால் இந்தப் படத்தை என் தலைக்கு நேரே வைக்கனும் என்று வீட்டினரிடம் அடிக்கடி சொல்லிவந்துள்ளார் பத்மினி.
இந் நிலையில் பத்மினி இறந்துவிட அந்தப் படத்தை தலையருகே வைத்தார் ஷேபனா. பத்மினிக்கு அஞ்சலிசெலுத்த வந்த சிவக்குமாரிடம் இதைச் சொல்லி சொல்லி அழுதார் ஷேபனா. இதைக் கண்ட அனைவரும்கண்கலங்கிவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications