சஸ்பெண்ட் ஆன போலீசாரை காப்பாற்றிய கலாம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் தன்னை ஆபரேசன் பிளேடுடன் வந்து சந்தித்த டாக்டர் தொடர்பாக, 3போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு மதுரை கமிஷனர்சிதம்பரசாமிக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் மதுரை வந்த கலாம் சர்க்கியூட் ஹவுசில் தங்கினார். அப்போது, அவரைஅரசு டாக்டரான முருகேசன் என்பவர் வந்து சந்தித்தார்.

மூன்று ஆண்டுகளாக ஒரே பிளேடை வைத்துக் கொண்டு ஆபரேசன் செய்ய வேண்டியநிலையில் அரசு மருத்துவமனை உள்ளதாக முருகேசன் புகார் கூறினார்,

ஜனாதிபதியை பிளேடுடன் டாக்டர் ஒருவர் சந்தித்தது, பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.

போலீஸ் சோதனையைத் தாண்டி எப்படி பிளேடுடன் அவர் ஜனாதிபதியைநெருங்கினார் என்று விசாரிக்கப்பட்டது.

பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் முறையாக சோதனை செய்ய தவறியதாகவும்கூறி மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ சாந்திமற்றும் ஏட்டு தவீத்ராஜ் ஆகிய மூவரையும் கமிஷனர் சிதம்பரசாமி சஸ்பெண்ட்செய்தார்.

இது குறித்து கலாமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிஅலுவலகத்திலிருந்து கமிஷ்னர் சிதம்பரசாமிக்கு பேக்ஸ் மூலம் ஒரு உத்தரவுவந்துள்ளது.

அதில் போலீசார் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, போலீசார் மீதான சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்துசெய்தார் சிதம்பரசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+