விஜய்காந்துக்கு கருணாநிதி சூடு
சென்னை:
முரசு சின்னத்தை திமுக பறித்து விட்டதாக பாமரர்கள் வேண்டுமானால் நம்பலாம்.படித்தவர்களோ, பட்டறிவு பெற்றவர்களோ நம்ப மாட்டார்கள் என முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,1984ம் ஆண்டில் அண்ணா பவள விழா மலர் வெளியிடப்பட்டது. முதன்முதலாகஎன்னால் அமைச்சராக்கப்பட்டவரும், பின்னர் எம்.ஜி.ஆரின் தலைமையில்அமைச்சராக இருந்தவரும், இன்று விஜய்காந்த் கட்சியில் பிரதான பொறுப்பில்இருப்பவருமான என் பழைய நண்பர் ஒருவர் (பண்ருட்டி ராமச்சந்திரன்), அந்த விழாமலரில் அந்த கால நிகழ்ச்சிகள் சிலவற்றின் படங்களை தொகுத்துவெளியிட்டிருந்தார்.
குறிப்பாக என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிப் படம். அண்ணா தனதுவாழ்நாளின் கடைசி நிகழ்ச்சியாக சென்னை வாணிமகால் எதிரே என்எஸ்கேசிலையை என் தலைமையில் திறந்து வைக்கிறார்.
விழாவில் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்பன், ஏ.எல்.சீனுவாசன், நாகிரெட்டி,எம்ஜிஆர், இந்தி நடிகர் திலீப்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அப்போது எடுத்த படம் என்று சொல்லி அந்த மலரில் ஒரு படத்தைவெளியிட்டிருந்தனர். அதில் அந்தச் சிலை திறப்பு விழாவுக்கு தலைமை வகித்துநடத்தி வைத்த என் உருவம் அந்தப் படத்தில் நடுவே இருந்ததை லாவகமாக கத்தரித்துஎறிந்துவிட்டு அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் படத்தை ஒட்டி விட்டார்கள்.
அத்தகைய மகானுபவரின் (பண்ருட்டி ராமச்சந்திரன்) மந்திராலோசனை பெற்றுநடக்கும் விஜய்காந்த் கட்சியினர், அதே மகானுபவரிடம் இப்போது பெற்றுள்ளமற்றொரு விஷயதானம் தான் அவர்களது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட முரசு சின்னத்தைஅரசு முடக்கிவிட்டது என்ற முழுப் பொய்ப் பிரசாரமாகும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முரசு சின்னம்ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சின்னம் அவர்களுக்கு வழங்கப்படவில்லைஎன்றும், அதற்கு காரணம் திமுக அரசு தான் என்றும் பாமர மக்கள் நம்புவதைப் போலஒரு காரணம் கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்தால்நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் சென்னையில் உள்ள மாநில தேர்தல்ஆணையத்தால் நடத்தப்படுகிறது.
மத்திய தேர்தல் ஆணையத்தில் சுயேச்சை சின்னங்களுக்கென தனி பட்டியல் உண்டு.எனவே முரசு சின்னம் அப்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழகதேர்தல் ஆணையம் வைத்துள்ள பட்டியலில் முரசு சின்னம் கிடையாது. பட்டியலில்இடம்பெறாத சின்னத்தை தமிழக தேர்தல் ஆணையம் எப்படி ஒதுக்கிட முடியும்?
ஏற்கனவே இருந்த ஒரு சின்னத்தை இப்போது பறித்து விட்டதாக பறைசாற்றுவதைபாமரர்கள் ஒருவேளை நம்பலாம். படித்தவர்களோ, பட்டறிவு பெற்றவர்களோ நம்பமுடியுமா? நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications