மதுதேவி மரணம்-நிர்மலா மீது குற்ற பத்திரிக்கை
சென்னை:
முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் மனோகரனின் மருமகள் மதுதேவி தற்கொலை வழக்கில்நடிகை நிர்மலா, மதுதேவியின் கணவரும் நிர்மலா மீது மோகம் பிடித்து அலைந்தவருமான நவீன்குமார் உள்பட 5பேர் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.கோவில்பட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர் மதுதேவி. இவருக்கும் மனோகரனின் மகன்நவீன் குமாருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மதுதேவியை மனோகரன் குடும்பத்தினர் திட்ட ஆரம்பிக்கவேபிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மனோகரன் குடும்பத்தின் டார்ச்சர் தாங்காமல் கடந்த ஜூலை மாதம் ஒருஹோட்டலில் போய் ரூம் எடுத்து தனியே தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் மதுதேவி.
![]() |
இந் நிலையில் ஜூலை 1ம் தேதி தனது ஹோட்டல் அறையிலேயே மதுதேவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவர் எழுதி வைத்த கடிதத்தில்,
![]() |
தனது கணவர் நவீன்குமாருக்கும் டிவி நடிகை நிர்மலாவுக்கும் இடையிலான கள்ளத் தொடர்பையும், தனது நகை,பணத்தை நிர்மலாவுக்கு நவீன்குமார் அள்ளித் தந்து செக்சில் திளைத்து வந்ததையும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது மாமனார் மனோகரன், மாமியார் கனகவள்ளி, நாத்தனார் உமா ஆகியோர் தன்னிடம் கூடுதல்வரதட்சணை கேட்டு படுத்திய பாட்டையும் விவரித்திருந்தார்.
இதையடுத்து நவீன் குமார் கைது செய்யப்பட்டார். இவரைக் காப்பாற்ற உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங்யாதவின் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் போலீசாருக்கு பிரஷ்ஷர் தந்தனர். நவீன்குமாரும் முலாயமின்மகனும் ஒன்றாக படித்தவர்களாம்.
ஆனால், இந்த நெருக்கடிகளை மீறி போலீசார் வழக்கை விசாரித்தனர். இதில் நிர்மலா-நவீன்குமார் இடையிலானசெக்ஸ் உறவும், இருவரின் குடிப் பழக்கமும் உறுதியானது.
நிர்மலா வீட்டில் போலீசார் ரெய்ட் நடத்தி மதுதேவியின் நகைகளையும் கைப்பற்றினர். நவீன்குமார் போலீசாருக்குஅளித்த வாக்குமூலத்தில், தன் மனைவி செக்ஸில் அவ்வளவாக நாட்டமில்லமல் இருந்ததாகவும், ஆனால் தனக்குநிர்மலா பல வகைகளிலும் உல்லாசத்தைத் தந்ததாகவும் கூறியிருந்தார்.
![]() ![]() ![]() ![]() |
இந் நிலையில் இந்த வழக்கில் போலீசார் குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 150பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மதுதேவின் தற்கொலைக்கு நவீன்குமார், மனோகரன், உமா, கனகவள்ளி, நிர்மலா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்


















Click it and Unblock the Notifications