For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காணாமல் போன கார்த்திக்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Karthick

அரசியலை கலக்கப் போகும் சிங்கம் என பார்வர்ட் பிளாக் கட்சியினரால் பெரிதும்எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாமல்படு அமைதியாக இருக்கிறார்.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பாகபேசப்பட்டவர் கார்த்திக். அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் கார்த்திக். சரணாலயம் என்ற அமைப்பை ஆரம்பித்துமுக்குலத்தோர் வகுப்பு இளைஞர்கள் கூட்டத்தை சேர்த்துக் காட்டி அரசியல்வட்டாரத்தை கலக்கினார்.

புதுக் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்வர்ட் பிளாக்கட்சியில் சேர்ந்து அதன் மாநிலத் தலைவரானார் கார்த்திக். இதனால் அதிகம்கலங்கியது அதிமுகதான். காரணம், முக்குலத்தோர் சமூகத்தின் பெரும்பாலானஓட்டுக்களை அதிமுகதான் பல காலமாக வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.

கார்த்திக்கின் வருகையால் முக்குலத்தோர் வாக்குகள் அவர் பக்கம் திரும்பி விடுமோஎன அஞ்சியது அதிமுக தலைமை. அப்போது ஆட்சி அதிமுக கையில் இருந்ததால்கார்த்திக்குக்கு செக் வைக்கும் நடவடிக்கைகள் படு வேகமாக முடுக்கி விடப்பட்டன.

முதலில் கார்த்திக்கை கூட்டணிக்குள் இழுக்கப் பார்த்தது அதிமுக. ஆனால் அவர் பிகுபண்ணவே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதன் பின்னர் பார்வர்ட் பிளாக்கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு பலவகைகளிலும் தடுக்கப்பட்டார்கள்.

கார்த்திக்கே கூட பிரசாரத்தை சரிவர செய்ய முடியாத அளவுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள்.அப்படியும், இப்படியுமாக பிரசாரத்தை மேற்கொண்டார் கார்த்திக். தேர்தலில் பார்வர்ட்பிளாக் வேட்பாளர்கள் அத்தனை பேரும் டெபாசிட்டை பறிகொடுத்து பரிதாபமாகநின்றனர்.

சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பிழைக்கிறவழியைப் பாருங்கள் என முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த பல பிரமுகர்கள்கார்த்திக்குக்கு அறிவுரை கூறியதால், அந்த யோசனைக்கு அவர் வரத் தொடங்கினார்.

ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போடுவது போல, யாரோ சில விஷமிகள்,கார்த்திக் பெயரைப் பயன்படுத்தி ஜெயலலிதா மன்னிப்பு கேட்டால்தான் கூட்டணிஎன்று அறிக்கை விட்டனர். இதனால் அதிமுக தரப்பு கடுப்பானது. நான் அப்படிஅறிக்கை விடவில்லை என்று கெஞ்சும் அளவுக்குப் போனது கார்த்திக்கின் நிலை.

இதை விட உச்சமாக, கார்த்திக்கை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக அவரது கட்சியின்லெட்டர் பேடிலேயே அறிக்கை வந்தது. ஆனால் இதுவும் போலியானது என்றுகார்த்திக் மறுத்தார்.

இப்படியாக பெரும் குழப்பத்துடன் அரசியலில் அடி போட்டுக் கொண்டுள்ளபார்வர்ட் பிளாக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறதா, இல்லையா என்றதெரியாத அளவுக்கு கார்த்திக் மயான அமைதி காத்து வருகிறார்.

பார்வர்ட் கட்சி இருக்கிறதா, செயல்படுகிறதா, கார்த்திக் என்ன ஆனார், என்னதான்நடக்கிறது என்பது தெரியாமல் பார்வர்ட் பிளாக் கட்சியினர் பெரும் குழப்பத்தில்உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிந்து, பிரசாரம் சூடு பிடிக்கத்தொடங்கியும் கூட, பார்வர்ட் பிளாக் கட்சியின் பங்கு குறித்து கார்த்திக் வாய்திறக்காமல் உள்ளார்.

பார்வர்ட் பிளாக் கட்சியினர் கார்த்திக்கை நம்பி சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல்செய்து வைத்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரத்திற்கு வருவாராஎன்று அவர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

கார்த்திக்கை போனில் கூட அவர்களால் பிடிக்க முடியவில்லையாம். கட்சிஅலுவலகத்திற்கும் அவர் வருவதில்லையாம்.

ஒருபுறம், தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கி ஆனானப்பட்ட திமுக,அதிமுகவுக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறார்விஜயகாந்த். மறுபுறம், மேலும் மேலும் வீரியம் குறைந்து, சுருங்கிக் கொண்டேபோகிறார் கார்த்திக்.

சுயமாக முடிவெடுக்க முடியாத அளவுக்கு இடையூறுகள், குழப்பமான மன நிலை,திட்டமிடாத செயல்பாடுகள், துணிச்சலாக முடிவெடுக்கும் தைரியம் என ஒரு பக்காஅரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய தகுதிகள் இன்னும் கார்த்திக்குக்கு வராததால்தான்இந்த நிலைமை என்கிறார்கள் அரசியல் நுணுக்கங்களை அறிந்தவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X