காவல்துறை அதிகாரிகளுக்கு ஜெ. தைரியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை :

திமுகவினருக்குப் பயப்படாமல் காவல்துறையினர் தைரியமாக பணியாற்ற வேண்டும். உங்களைக் காக்க நான்இருக்கிறேன், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். எனவே கவலைப்படாமல் பணியாற்றுங்கள் என்றுபேசியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில், அதிமுக கூட்டணி சார்பில், உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

முந்தைய பொதுக் கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகள் சிலர் திமுகவினருக்கு சாதகமாக செயல்படுவதாககுற்றம் சாட்டிய ஜெயலலிதா, அவர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்தார். இதுகுறித்து கோவையில் கருத்துதெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மிரட்டுவது சாதாரணமானது, சகஜமானது என்றுகூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை பொதுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும்தொணியில் பேசிய ஜெயலலிதா, அவர்களுக்கு ஐஸ் வைக்கும் வகையிலும் பேசினார்.

ஜெயலலிதாவின் பேச்சு: சிறையில் அடைக்கப்பட்டிருந்த, திமுகவைச் சேர்ந்த கைதிகளை வெளியே கொண்டுவந்து அவர்களை வைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினரை தாக்கி வருகின்றனர்.

காவல்துறையினர் அவர்களுக்குத் துணையாக உள்ளனர். இது வேண்டாம். காவல்துறையினர் நடுநிலையுடன்செயல்பட வேண்டும். கீழ் மட்ட காவல்துறையினர் நடுநிலையோடுதான் இருக்கிறார்கள். ஆனால் மேல்மட்டத்தில்உள்ள சில அதிகாரிகள்தான் அடியோடு சரியாக இல்லை. மீண்டும் எச்சரிக்கிறேன். உங்களை கவனித்துக்கொண்டுதான் உள்ளேன். பார்த்து நடந்து கொள்ளுங்கள்.

நாங்கள் என்ன செய்வது என்று காவல்துறையினர் கேட்கலாம். ஒருபுறம் திமுக மிரட்டுகிறது. சொல்வதைசெய்யாவிட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள், டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள், இன்னும் பிற பிரச்சினைகளைஎல்லாம் சந்திக்க வேண்டும் என திமுகவினர் மிரட்டுகிறார்கள்.

எனவே காவல்துறையினர் நினைக்கலாம், ஒருபுறம் திமுக மிரட்டுகிறது, மறுபுறம் அதிமுக எச்சரிக்கிறது. நாங்கள்யார் பேச்சைக் கேட்பது என நினைக்கலாம். நான் தைரியம் அளிக்கிறேன். திமுக அரசு நீண்ட நாள் இருக்காது.கருணாநிதியின் மைனாரிட்டி அரசு நீடிக்காது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டே தீரும். ஆட்சி போய் விடும். காலம்மாறும், காட்சி மாறும், ஆட்சி மாறும், மீண்டும் அதிமுக அரசு வரும்.

உங்களை சஸ்பெண்ட் செய்தாலும், டிஸ்மிஸ் செய்தாலும் கவலைப்படாதீர்கள். அந்த நடவடிக்கைகளையெல்லாம்நான் ரத்து செய்கிறேன். கவலைப்படாதீர்கள், தைரியமாக இருங்கள். நேர்மையாக உங்களது கடமைகளைசெய்யுங்கள். எங்களுக்கு சாதகமாக இருங்கள் என சொல்லவில்லை. நேர்மையாக இருங்கள், நடுநிலையோடுஇருங்கள்.

உங்களைக் காக்க நான் இருக்கிறேன். உங்களைக் காக்கும் கழக அரசு விரைவில் வரவுள்ளது என்பதை மனதில்வைத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+