கோவை: ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை
கோவை:
கோவையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் தலைமைக் காவலர் ஒருவர் தனது 2 குழந்தைகள், மாமியார்,தம்பி மாமியாருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பி.என்.பாளையம், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் தலைமைக் காவலராக இருந்து வந்தார். சிறந்த பணிக்காக குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடமிருந்து விருது பெற்றவர் நடராஜ்.இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், வைஷ்ணவி, விஜய் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்தஒன்றரை மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அன்று முதல் நடராஜ் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்தார். யாருடனும் சரியாக பேசாமல் இருந்துவந்தார். அவரது நிலையைப் பார்த்த மாமியார் முத்தீஸ்வரி, தம்பியின் மாமியார் கமலம்மாள் ஆகியோர்நடராஜுடன் தங்கியிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை விஷம் வாங்கி வந்த நடராஜ், அதை சாப்பாட்டில் கலந்துள்ளார். இதை தனதுமாமியார்களிடம் தெரிவித்தார். அவர்களும் சரி என்று சம்மதித்துள்ளனர்.
பின்னர் விஷம் கலந்த சாப்பாட்டை தானும் சாப்பிட்டு 2 குழந்தைகள், மாமியார்களுக்கும் கொடுத்துள்ளார். சிறிதுநேரத்திலேயே 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இரவில் வீட்டுக்கு வந்த நடராஜின் தந்தை வெள்ளியங்கிரி வீடு பூட்டிக் கிடந்தது. உள்ளே ஐந்து பேரும் இறந்துகிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். போலீஸாருக்குத் தகவல் கிடைத்து விரைந்து வந்து ஐந்து பேரின்உடல்களையும் மீட்டனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு நடராஜ் 3 கடிதங்களையும் எழுத வைத்திருந்தார். அந்தக் கடிதங்களைபோலீஸார் கைப்பற்றியுள்ளனர். மனைவியை இழந்த சோகத்தில் நடராஜ் இந்த கோர முடிவை எடுத்ததாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications